Homeசெய்திகள்ஆவடிஅயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்

அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்

-

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.

சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டிதள்ளிய மாடு – பீதியில் மக்கள்ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரதான  சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதே போன்று அயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் சாலைகளில் மாடுகள்,தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றன. இந்த நிலையில் அய்யபாக்கம் பகுதியை சேர்ந்த ஷோபனா என்ற பெண் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டிதள்ளிய மாடு – பீதியில் மக்கள்அப்பொழுது அந்த வழியில் மந்தையாக நின்றுகொண்டிருந்த மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு பலமாக ஷோபனா என்ற பெண்ணை முட்டி தூக்கி வீசியது இந்த அதிர்ச்சி காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. மாடு முட்டி தூக்கி வீசியதில் மயக்கமடைந்து சாலையில் கிடந்துள்ளார். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டுள்ளனர்.

ஆவடி: அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மேலும் அப்பெண்ணுக்கு கால், இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த உள்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மாடு உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

எனினும் சம்பந்தபட்ட மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ