Homeசெய்திகள்சினிமாஅம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது.... பா. ரஞ்சித் பேட்டி!

அம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது…. பா. ரஞ்சித் பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். அம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது.... பா. ரஞ்சித் பேட்டி!அந்த வகையில் இவர் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இருப்பினும் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான தங்கலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து வேட்டுவம் எனும் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் பா. ரஞ்சித். இந்நிலையில் சென்னையில் புகைப்பட கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட பா. ரஞ்சித் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது.... பா. ரஞ்சித் பேட்டி!அப்போது அவரிடம் மாநிலங்களவையில் அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசிய விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பா. ரஞ்சித், “அம்பேத்கரை யாராலும் வெறுக்க முடியாது. அவரை யாராலும் ஒதுக்கவும் முடியாது, புறந்தள்ளவும் முடியாது. அவர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டி எழுப்ப முடியாது. இதனை அமித்ஷாவும் அக்கட்சியினரும் புரிந்து கொண்டார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர் அம்பேத்கரை பற்றி பேசிய பின்னர் மக்கள் மத்தியில் ஒரு பெரிய அலையே எழுந்துள்ளது. அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் சக்தியை அவர்கள் உணர்ந்து இருப்பார்கள் என நினைக்கிறேன். இது நம் சிஸ்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை அம்பேத்கரின் கருத்துக்களைக் கொண்டு சரி செய்வதற்கான நேரம் என நினைக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ