Homeசெய்திகள்சினிமாலோகேஷ் தயாரிப்பில் உருவாகும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் மிஸ்டர் பாரத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஃபைட் கிளப் படத்தினை தயாரித்திருந்தார். அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள பென்ஸ் திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அடுத்தது மிஸ்டர் பாரத் எனும் திரைப்படத்தின் தயாரிக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தினை நிரஞ்சன் இயக்க யூடியூபர் பாரத் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இதில் சம்யுக்தா விஸ்வநாதன், நிதி பிரதீப், லிங்கா, பால சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர். லோகேஷ் தயாரிப்பில் உருவாகும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!ஓம் நாராயணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய பிரணவ் முனிராஜ் இதற்கு இசை அமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்திலிருந்து ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ