சென்னை சின்னமலையில் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைக்கப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்( 26). கேட்டரிங் படிப்பு முடித்துவிட்டு அது தொடர்பான வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது தந்தை கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வந்தவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவரது அம்மாவுக்கு கேன்சர் நோய் இருந்து வந்ததாகவும் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் அவரது தாய் நேற்று கடுமையாக திட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஆகாஷை காணாததால் அவரது தாயும் அண்ணனும் தேடி வந்துள்ளனர். இரவு முழுவதும் காணாததால் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் ஆகாஷின், அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் டிவி கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சடலத்தை மீட்டு கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையை மாற்றினால்..? பாஜகவுக்கு மருது அழகுராஜ் எச்சரிக்கை..!