Homeசெய்திகள்சினிமா'வணங்கான்' படத்திலிருந்து முதல் பாடல் இணையத்தில் வெளியீடு!

‘வணங்கான்’ படத்திலிருந்து முதல் பாடல் இணையத்தில் வெளியீடு!

-

- Advertisement -

வணங்கான் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.'வணங்கான்' படத்திலிருந்து முதல் பாடல் இணையத்தில் வெளியீடு!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்காவிடம் பிடித்திருப்பவர் பாலா. இவருடைய சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அடுத்ததாக இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் இருந்து இரை நூறு எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை மது பாலகிருஷ்ணன் பாடியுள்ள நிலையில் கார்த்திக் நேதா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ