Homeசெய்திகள்கட்டுரைநாடாளுமன்றத்தில் நடைபெற்றது இதுதான்... பாஜக நாடகத்தின் முழு பின்னணி... போட்டுடைக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன்!

நாடாளுமன்றத்தில் நடைபெற்றது இதுதான்… பாஜக நாடகத்தின் முழு பின்னணி… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன்!

-

- Advertisement -

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை நிலவரம் தெரிய வரும் என பிரபல பத்திரிகையாளர் நிரஞசன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகளை ராகுல்காந்தி தாக்கியதாக கூறி டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த பிரபல தமிழ் பத்திரிகையாளர் நிரஞ்சன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

அம்பேத்கர் விவகாரம் - ராகுல்காந்தியை குறிவைக்கும் பாஜக- பரபரப்பில் நாடாளுமன்றம்

அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் போராட்டம் நடத்த உள்ளார்கள் என்றால், அதற்கு முதல் நாளே அவைக் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அம்பேத்கர் அவமதிப்பு செய்த விவகாரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டம் என்பதும் திட்டமிட்டே நடைபெற்றது. அதனால்தான் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் நீலநிற உடை அணிந்து வந்தனர். டி.ஆர்.பாலு போன்ற மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முதல் வரிசையில் பெண்களும், 2-வது வரிசையில் ராகுல்காந்தி, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியினர் வந்தனர். இந்த போராட்டம் ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால், பாஜகவினரும் அதற்கு எதிராக போராட்டம் அறிவித்தனர். மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இந்தியா கூட்டணி பெண் எம்.பி-க்கள் சிலை அருகே வந்து போராட்டம் செய்தபோது, பாஜகவினர் வந்து பதில் கோஷம் எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி செய்தியாளர்களை சநதித்தபோது, சில வீடியோக்களை காண்பித்தார். அதில் ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி-க்கள், பெண் எம்.பி-க்களுக்கு பாதுகாப்பாக சுற்றி நின்றிருந்தனர். அவர்கள் அருகில் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் அவ்வாறு நின்று கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு நடைபெற்றது உண்மைதான். அதனை ராகுல் காந்தியும் ஒப்புக்கொண்டார். மத்திய அமைச்சர்களும ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்த தள்ளுமுள்ளு ஏன் தொடங்கியது என தெரியுமா?. 80 வயதான காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை பிடித்து சில பாஜக எம்.பிக்கள் தள்ளினர். இதில் கார்கே நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரால் எழுந்திருக்க முடியாததால், ராகுல்காந்தி மற்றும் ஆண் எம்பி-க்கள் அவரை மீட்டு சேர் எடுத்துவந்து அமர வைத்தனர். கார்கேவின் உடல்நிலை சரியில்லாத நிலையில் உள்ளது. அவர் மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது 3 முறை மயங்கி விழுந்து விட்டார். அதேவேளையில், பாஜகவினரை ராகுல் காந்தி பிடித்து தள்ளிவிட்டார் என்கிற குற்றச்சாட்டினை எதிர்க் கட்சிகள் திட்டவட்டமாக மறுக்கின்றனர். பாஜக எம்.பி.க்கு அடிபட்ட உடன் ராகுல் காந்தி அவரிடம் நலம் விசாரிக்க சென்றார். அப்போது பாஜகவினர் வாக்குவாதம் செய்ததால் அவர் நலம் விசாரிக்காமல் திரும்பி சென்றார். ராகுல்காந்தி திடடமிட்டு தள்ளி விட்டிருந்தால் நிச்சயமாக பாஜக எம்.பி-ஐ பார்க்க சென்றிருக்க மாட்டார். சிசிடிவி காட்சிகள் வெளியே வந்தால் என்ன நடந்தது என்ற விவரம் தெரியவரும்.

நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை நாடாளுமன்ற விவகாரத் துறை, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், அவர்களுக்கு கிழ் உள்ள செயலாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்த நிலையில், நாடாளுமன்ற விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி மீது டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் நேரில் விளக்கம் அளிக்க அழைக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதற்கு தயாராகி வருகின்றனர். ஒரு விவகாரத்தில் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு நீதிமன்றத்திற்கு வரத்தான் செய்யும். அப்படி நீதிமன்றம் சென்றால் சிசிடிவி காட்சிகளை கேட்பார்கள். அபபோது காண்பிக்க நேரிடும். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தை கொலை முயற்சி என பெரும்பாலான ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ராகுல் காந்தி கொலை முயற்சியில் ஈடுபட்டார் என நிறைய பாஜக எம்.பி-க்கள் பேட்டி கொடுக்கின்றனர். ஏன் பிரதாப் சாரங்கி முதலில் வேறு எம்.பி. தள்ளிவிட்டார் என்று கூறினார். சிறிது நேரத்திற்கு பின்னர் ராகுல்காந்தி தான் தன்னை தள்ளினார் என குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும்போது மிகவும் முக்கியமான வழக்காக இருக்கும். அதற்கு முன்னாள், இவ்வளவு பெரிய விவகாரம் நடைபெற்றுள்ளது. நாடே கவலையுடன் நாடாளுமன்றத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியே விட்டிருந்தால், அல்லது பத்திரிகைகளை அதிகாரப் பூர்வமாக அழைத்து, நடைபெற்ற சம்பவங்களை தெரிவித்திருக்கலாம். சபாநாயகர், துறை செயலாளர் இது குறித்து விளக்கம் அளித்து இருக்கலாம். நேற்று கூட மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாக்குதல் விவகாரம் தொடர்பாக எதுவும் பேச வில்லை. இதனை ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிப்பதற்கான வாய்ப்பாக பயன் படுத்துகின்றனர்.

ராகுல்காந்தியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பிரதாப் சாரங்கி, முந்தைய அரசில் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். அவர் மிகவும் எளிமையானவர் என பாஜகவினர் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். பிரதாப் சாரங்கி 2 செட் துணிகள் தான் வைத்துள்ளனர் என்கின்றனர். ஆனால் கடந்த 1999 கால கட்டத்தில் பஜ்ரங் தள் போன்ற வலதுசாரி அமைப்பினரால் ஒடிசாவில் பாதிரியார் குடும்பத்துடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய தாராசிங் என்பருக்கு மரண தணடனை வரை விதிக்கப்பட்டது. அந்த நிகழ்வின் பின்னணியில் மிக முக்கியமாக செயல்பட்டவர் தான் பிரதாப் சாரங்கி. நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்தது விடுவித்தது. எந்த வழக்கும் அவர் மீது இல்லை. கடந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது முதல் மத்திய அமைச்சராக பொறுப்பு வழங்கியது வரை பிஜு ஜனதா தளம் கட்சி கடுமையாக எதிர்த்தது. மத்திய அமைச்சரவையில் இருக்கும்போதும் அவர் சிக்கலில் மாட்டியுள்ளார். இந்த முறை அமைச்சர் பதவி வழங்கவில்லை. இந்த நாடாளுமன்ற தாக்குதல் விவகாரம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக மீண்டும் அமைச்சர் வாய்ப்பை ஏற்படுத்தி தருமா என்று பார்க்க வேண்டும்.

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு விவகாரத்தில் 2 எம்.பிக்கள் காயம் அடைந்துள்ளதாகவும், பெண் எம்.பி ஒருவர் அவர் மீது புகார் தெரிவித்துள்ளதாகவும தகவல் வெளியாகி உள்ளது. பெண் எம்.பி விவகாரத்தை பொருத்தவரை ராகுல்காந்தி முதன்முறையாக இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட வில்லை. கடந்த அமைச்சரவையின் போது மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, தன்னை நோக்கி ராகுல்காந்தி பிளையிங் கிஸ் கொடுத்ததாக தெரிவித்தார். ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது, அந்த புகார் என்ன நிலையில் உள்ளது என யாருக்கும் தெரியாது. முன்னர் நடைபெற்ற நிகழ்வின்போது, காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த கனிமொழி, சுப்ரியா போன்ற பெண் எம்.பி.க்கள் ராகுல்காந்தியின் செயலில் தவறு இல்லை என ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தின்போது அதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு இல்லை. பாரத் ஜேடோ யாத்திரையின்போது பஞ்சாப் நடிகையுடன் ராகுலை தொடர்புப்படுத்தி மீம்களை வெளியிட்டனர். பெண்கள் சார்ந்த விவகாரங்களில் ராகுல்காந்தி தொடர்ந்து குறி வை க்கப்படுகிறார். அவர் குறித்த தவறான எண்ணத்தை கட்டமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

தனது பேச்சு ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அப்படி என்றால் உங்களிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை. அங்கு நடைபெறும் நிகழ்வுகளை சன்சத் என்ற அரசுக்கு சொந்தமான டிவிதான் ரெக்கார்டு செய்தனர். அப்போது அந்த டிவிக்காரர்களுக்கு தெரியாமல் இது நடைபெற்றதா?. அமித் ஷாவினுடைய பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெறும். அதை யாரும் இதை மறுக்கவில்லை. இது வெறும் அமைச்சரின் பேச்சு திரித்துக்கூறப்பட்டதா, அல்லது நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா?. மேலும தவறு நடைபெறாமல் இருந்தால் இது தொடர்பாக ஏன் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படவில்லை. பொய் என்றால், அமித்ஷா பேச்சு தொடர்பான வீடியோக்கள் சமுக வலைதளங்களில் நீக்கப்படாமல் இருப்பது ஏன்?

அமித்ஷாவினுடைய பேச்சு பாஜகவினருக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கர் விவகாரம் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துள்ளது. தலித் அரசியல் என்பதை பாஜக நாடு முழுவதும் மிக பிரதானமாக எடுத்துச்சென்றது. பிர்சா முண்டா போல ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த ஊர்களின் தலைவர்களை பெருமைப்படுத்தியது. அதில் அம்பேத்கர் விஷயம் ரொம்ப முக்கியம். மோடியின் ட்வீட்டில் காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு செய்த துரோகங்களை தான் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ். விசிக போன்ற எதிர்க்கட்சிகள் அமித்ஷா அம்பேத்கர் மீதான ஆழ்மன வெறுப்பு வார்த்தைகளாக வெளிப்பட்டுள்ளது என்கின்றனர். ஒரு தலைவரை அப்படியாக பார்த்திருக்க கூடாது. பாஜக தங்களது எம்.பிக்களை கூடிய மட்டும் பாதுகாக்கவே செய்யும், அமித்ஷா தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் – பாஜக இடையிலான மோதல் குறித்து டெல்லி காவல்துறை நடுநிலையாக செயல்படுமா? என்றால் சந்தேகமே. மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் அவர்களது நடவடிக்கை கேள்விக்குறியாக இருந்தது. சர்ச்சை கருத்து திரிவித்த பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா விவகாரத்தில் இறுதிவரை நடவடிக்கை எடுக்கவே இல்லை. தாக்குதல் விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி மீது டெல்லி மட்டுமின்றி பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை ராகுலிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தில் மைசூர் எம்.பி அளித்த பாஸ்தான், நாடாளுமன்றத்தில் வண்ணப்பொடி வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம்தான் பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ