Homeசெய்திகள்க்ரைம்பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு

-

- Advertisement -

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு

தனியார் பிரபல யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது காரமடை காவல் நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ttf vasan

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் ஸ்டண்ட் செய்து அதனை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மகன் ஆவார். இவர் மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சில வழக்குகளில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக காரமடை காவல் நிலையத்தில் அந்நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ