Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் ராஜு நடிக்கும் 'பன் பட்டர் ஜாம்'.... கலக்கலான டீசர் வெளியீடு!

பிக் பாஸ் ராஜு நடிக்கும் ‘பன் பட்டர் ஜாம்’…. கலக்கலான டீசர் வெளியீடு!

-

- Advertisement -

பன் பட்டர் ஜாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் ராஜு நடிக்கும் 'பன் பட்டர் ஜாம்'.... கலக்கலான டீசர் வெளியீடு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜு ஜெகன் மோகன். இவர் ஏற்கனவே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது பன் பட்டர் ஜான் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராஜுவுடன் இணைந்து பவ்யா த்ரிகா, சரண்யா பொன்வண்ணன், ஆத்யா பிரசாத், சார்லி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு பாபு குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரெயின் ஆப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் இன்றைய இளைஞர்களின் கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அடுத்தது இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது இப்படம் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. மேலும் இந்த டீஸர் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

MUST READ