Homeசெய்திகள்சென்னை"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு" - இயக்குநர் கரு.பழனியப்பன்

“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” – இயக்குநர் கரு.பழனியப்பன்

-

- Advertisement -

“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” என்று  த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.

இயக்குநர் கரு.பழனியப்பன்மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாகன உற்பத்தியில் தமிழ்நாடு என எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது.

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் , சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கரு. பழனியப்பன், 200 இடங்களில் திமுக வெற்றி பெறும் என்பது மட்டுமே ஆணவ பேச்சா ?, 183 திமுக அதிக இடங்களில் வெற்றியை 200 ஆக்க வேண்டும் என்றார் ஏனென்றால் கட்சி தொடங்கிய ஆண்டிலேயே ஒருவர் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்லலாமா..? அப்படிப் பேசுவது ஆணவப் பேச்சு என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மேலும் அறிவார்ந்த ஜெயரஞ்சன் போன்றவர்களெல்லாம் சட்டசபைக்கு செல்ல வேண்டும், அதிகாரிகளை கையாள முடியும் என்றார்.  முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தையையே வெல்லும் விதமாகவும் , தாண்டும் விதமாகவும் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரொம்ப கவனமாக இருக்கனும்..!! இனிமேல் தான் இருக்கு விஜய்க்கு..!! எச்சரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்….

MUST READ