Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுக்கு பி.கே... திமுகவுக்கு ஷோ டைம்..! கடும் ஆத்திரத்தில் உடன்பிறப்புகள்..!

அதிமுகவுக்கு பி.கே… திமுகவுக்கு ஷோ டைம்..! கடும் ஆத்திரத்தில் உடன்பிறப்புகள்..!

-

- Advertisement -

மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் வாக்குறுதிகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். அவர்களது மறைவிற்குப் பிறகு தேர்தல் வியூக நிபுணர்கள்தான் வெற்றி தோல்வியை தமிழகத்திலும் தீர்மானிக்கிறார்கள் என கட்டமைக்கப்பட்டு வருகிறது.

2026 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் தீவிரமாகக் களமிறங்க தயாராகி வருகின்றனர். இரு கட்சிகளும் தேர்தல் வியூக ஆலோசனை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதிமுகவை வசப்படுத்திய எடப்பாடி பழனிசாமி வரிசையாக தோல்விகளை தழுவி வருகிறார். தொடர்ச்சியாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் 10 வது முறையாக தோல்வி அடைந்து உள்ளது.

இந்நிலையில், அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான்.

அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர்.

அடுத்ததாக திமுகவும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாம். அதன்படி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்த Showtime (ஷோ டைம்) நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல். ஷோ டைம் நிறுவனம் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது. அங்கே சிவசேனாவுடன் இரண்டு பிரிவுகள் இடையே கடுமையான மோதல் நிலவியது. அதிலும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவே வலிமையாக இருந்தது. அதையும் மீறி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா பிரிவுடன் வேலை பார்த்தது அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அந்த நிறுவனத்துடன் ஆளும் திமுக ஆலோசனை செய்து வருகிறதாம்.

இதே நிறுவனம்தான் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு சந்திரபாபு நாயுடுவிற்காக பணியாற்றியது. சந்திரபாபு நாயுடு வெற்றிபெற இந்த அமைப்பு காரணமாக இருந்தது. இதே குழுவுடன்தான் இப்போது திமுக ஆலோசனை செய்து வருகிறதாம். விரைவில் ஒப்பந்தம் ஏற்படலாம். ஏற்கனவே பி.கே. டீமில் வேலை பார்த்த பலர் ‘மாப்பிள்ளை’ டீமில் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனை அறிந்த திமுகவினர், ‘‘வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்
பிரசாந்த் கிஷோர் அதிமுகவுக்கு வேலை பார்க்க போவதாக தகவல். வரவேண்டும்… அப்போதுதான்அவரது பிராடு தனத்தை தோலுரித்து காட்ட முடியும். நீ ஒரு … இருந்தால் அதிமுகவை பதவியில் அமர்த்தி காட்டு பார்ப்போம்..’’என சவால் விடுகிறார்கள் திமுகவினர்.

MUST READ