2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் … ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர்” என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக பாத்து கத்துற – கதறுற பழனிசாமி தன்னோட டெல்லி எஜமானர்கள
நினைச்சாலே பம்முறாரு – பதறுறாரு பழனிசாமியோட வாழ்க்கை முழுக்க
துரோகம் என தெரிவித்தார்.
தி.மு.க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசியதாவது,”ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பதுதான் நம்மோட இலக்கு. 200 தொகுதிகள்ல நம்மோட கூட்டணி வெல்லும்.2026-ல வெற்றி நமதுதான் என்ற என்னோட இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் நீங்கதான்.
களத்துல நாம கொடுக்கப்போற உழைப்புதான், நம்மோட வெற்றிய
உறுதிசெய்ய போகுது. உங்களோட உழைப்ப ஐம்பது ஆண்டுகளா கூட இருந்து பார்க்குறவன் நான். தேர்தல்னு வந்துட்டா, இரவு பகல் பார்க்காம
வேலை செய்யிறவன் தான் கருப்பு – சிவப்பு தொண்டன். அசுர உழைப்ப கொடுத்து, வெற்றிய எட்டி பறிக்குறவன்தான் தி.மு.க.காரன். கொள்கையை வென்றெடுக்க உழைப்ப கொடுப்பதில் நமக்கு நிகர் யாரும் இல்லை.
1957-ல இருந்து 2024 வரை தேர்தல் களத்துல நாம எதிர்கொள்ளாத
எதிரிகளே இல்லை. எதிர்ல நின்னவங்க எல்லாம் மாறிக்கிட்டே இருக்காங்க. இந்த இயக்கம் மட்டும் எப்பவும் உறுதியா இருக்கு. ஏன்னா.. இது எப்பவும் மக்களோட இருக்கு. நடுவுல பத்தாண்டுகள் நம்மோட போராட்டம் எப்படிப்பட்டதா இருந்துச்சு?
ஒருமுறை எதிர்க்கட்சியா கூட வரல! சோர்ந்துட்டோமா நாம? வீட்டுக்குள்ளயே
முடங்கி உட்கார்ந்துட்டோமா? இல்லையே! ஒவ்வொரு நாளும் மக்களோடவே இருந்தோம்! மக்களுக்காக குரல் கொடுத்தோம்! வீதி வீதியா வீடு வீடா போய் மக்கள சந்திச்சோம்! வீதிக்கு வந்து மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுனோம்!
புயல் -வெள்ளம்-நு எந்தப் பாதிப்பு வந்தாலும், முதல் ஆளா ஓடிப்போய் மக்களுக்கு உதவுனோம்! இன்னும் பெருமிதத்தோடு சொல்லணும்னா, கொரோனாவுல உலகமே
முடங்கிப்போனப்ப வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடந்தப்ப லாக்டவுன் நேரரத்திலும்
மக்களின் தேவைகளை கேட்டு அறிஞ்சு – அவங்க வீடு தேடிப் போய் உதவி செய்த
ஒரே இயக்கம் தி.மு.கழகம்தான்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், முதலமைச்சரின்
காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் ,நம்மை காக்கும் 48, தோழி விடுதி-னு ஒரு நாள் முழுக்க பட்டியல் போடக்கூடிய அளவிலான திட்டங்களை நிறைவேத்திட்டு வர்றோம். அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெறணும்னு தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு வசதிகள்-நு ஓய்வில்லாம பணியாற்றிட்டு இருக்கோம். நான் சவால்விட்டு சொல்றேன்…இந்தியாவிலேயே எந்த மாநில அரசு இவ்வளவு திட்டங்களை இந்தளவுக்கு சிறப்பா செயல்படுத்திட்டு இருக்கா? நிச்சயம் கிடையாது!
கடந்த மூன்றரை ஆண்டுகளா ஓயாம உழைக்குற நமக்கு உற்சாகத்த தர்றது, தொடர் வெற்றிதான்! அந்த வெற்றிக்கு காரணம் நம்ம கூட்டணிக் கட்சித் தோழர்களும், தமிழ்நாட்டு மக்களும்தான்.
2019-ல கொள்கைக் கூட்டணியா சேர்ந்தோம், தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள்- எல்லாத்துலயும் வெற்றிதான். அதுனாலதான் இந்த கொள்கை கூட்டணிக்கு எதிரா பலரும் அரசியல் கணக்கு போடுறாங்க! நான் உறுதியா சொல்றேன்…நம்ம கொள்கைக் கூட்டணிக்கு எதிரா அவங்க போடுற கணக்கெல்லாம் தப்புக்கணக்கா தான் ஆகும். வெற்றிக் கணக்கு நம்ம கூட்டணிக்குத்தான். எதிர்க்கட்சிகள் எல்லாம் வாக்குகளைப் பிரிக்க தனித் தனியா வந்தாலும் சரி, மொத்தமா சேர்ந்து வந்தாலும்சரி, 2026 தேர்தல்ல தி.மு.க. கூட்டணிதான் வெற்றி பெறும். அதுவும் சாதாரண வெற்றி இல்ல, சரித்திர வெற்றி பெறுவோம்.
நான் மேடைக்கு மேடை நம்மோட திட்டங்கள புள்ளிவிவரங்களோட சொல்றேன்.
மக்களுக்குத் தெரியுமேனு எடுத்துச் சொல்லாம நாம அமைதியா இருந்துடக் கூடாது.
நமக்கு எதிரா நம்மோட எதிரிகள் பயன்படுத்துற முக்கிய ஆயுதம் -பொய்ச் செய்திகள்! அவதூறுகள்! இதுக்கு எதிரான நம்மோட ஆயுதம் –நம்ம ஆட்சியோட சாதனைகளும், நம்ம கொள்கைகளும்தான். நம்ம சாதனைகளை தமிழ்நாட்டுல இருக்க ஒவ்வொருத்தரோட உள்ளத்தையும் தொடுற மாதிரி உங்க ஸ்டைல்ல சொல்லுங்க.
களப்பணிக்கு, கழகப்பணிக்கு, வெற்றிப்பணிக்கு தொண்டர்கள தயார்படுத்த
வேண்டிய பணிய, செயற்குழு உறுப்பினர்களான நீங்க இன்னைக்கே தொடங்கணும்!
தொண்டர்களை காக்க வேண்டிய கடமை – அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தான் இருக்கு! இந்த செயற்குழுகூட்டம் நடக்குற அறிவாலயத்த கூட இதுவரை ஒரு முறைகூட பாக்காம இருக்கிற கடைக்கோடித் தொண்டனையும் நீங்க கவனமா பாக்கணும். அவங்ககிட்ட அன்பா பேசணும். அவங்க உழைப்பை மதிக்கணும். அதைத்தவிர வேற எதையும் அவங்க பெருசா எதிர்பாக்கல.
உங்க மேல நம்பிக்கை வெச்சு பணியாற்றுங்க. நீங்க இந்த நிலைக்கு உயர உங்க உழைப்புதான் காரணம். உங்க உழைப்ப, திறமைய யாரோ ஒருத்தர் அங்கீகரிச்சு, உங்களுக்கு வழிகாட்டுனதாலதான், நீங்க இந்த உயரத்துக்கு வந்திருக்கீங்க!
அதேபோல நீங்களும், இன்னும் பல இளைஞர்களை வளர்த்தெடுக்கணும்!
அவங்க வளர்ந்தா உங்களுக்கும் அது பெருமைதான். கட்சி வளர்ச்சிக்கு துணை நிக்குறவன்தான் உண்மையான தொண்டன். தன்னலத்தைவிட என்னைக்குமே கட்சிநலன்தான் பெரிது. இதையெல்லாம் மனசுல வெச்சு உங்களுக்கான “லெகசி”-ய நீங்கதான் உண்டாக்கணும்!
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லாம … யாரு … என்னனு பார்க்காம உங்க மாவட்டத்துல …. உங்க தொகுதில …கழக வேட்பாளர…கழகக் கூட்டணி வேட்பாளர வெற்றிபெற வைக்கணும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்னு எல்லாருக்கும் நான் சொல்லிக்க விரும்புறது, மக்களோட நெருக்கமா இருங்க. அவங்களோட தேவைகள அறிஞ்சு செஞ்சு கொடுங்க. எளிதில் அணுகக்கூடியவங்களா அவங்க குடும்பத்துல ஒருத்தரா இன்ப துன்பங்கள்ல உதவக்கூடியவங்களா இருங்க.கழகத் தோட செல்வாக்கை உயர்த்துற மாதிரி உங்க செயல்பாடுகள் இருக்கணும்.மக்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பிடிச்ச பண்பு எளிமைதான்.
நீங்க எந்த அளவுக்கு எளிமையா இருக்கீங்களோ அதே அளவுக்கு மக்களுக்கும் உங்களை பிடிக்கும். திராவிட முன்னேற்றக் கழகம், மக்களுக்கான இயக்கம்.
அதுவும் எளிய மக்களோட உரிமைகளுக்காக தொடங்கப்பட்ட இயக்கம்.
கொள்கை பிடிப்போட மக்களுக்காக உழைக்குறவங்கதான் இந்த இயக்கத்துக்கு
தேவை. வரலாற்றோட முக்கியமான காலகட்டத்துல நாம 2026 சட்டமன்றத் தேர்தல எதிர்கொள்ள போறோம்.
பொய்ப் பரப்புரைகள், அவதூறுகளை புறந்தள்ளி நாடாளுமன்றத் தேர்தல்ல மக்கள் நமக்கு வெற்றிய வழங்கியிருக்காங்க. அரசியல் சட்டதையே மாத்தணும்னு துடிச்சு நாடாளுமன்றத்துலயே புரட்சியாளர் அம்பேத்கர அவமதிக்குறவங்களுக்கு இந்தியா கூட்டணி மூலம் ஜனநாயகக் கடிவாளம் போட்டிருக்கோம். இதுதான் நம்ம இயக்கத்துக்கும் உங்களுக்கும் எனக்குமான பெருமை.
கொஞ்ச நாளா எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஒரு வாக்கு சதவீத கணக்க சொல்றார். அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குல திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுற மாதிரி அது இருக்கு. ‘காத்துல கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும்’ பழனிசாமி – “கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கு”-னு உளறி இருக்கார்.
இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்கு கைவந்த கலைதான். 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல 20 தொகுதிகள்ல போட்டியிட்ட அதிமுக
19.4 விழுக்காடு வாக்குகளை வாங்குச்சு. இதுவே 2024 நாடாளுமன்ற தேர்தல்ல
34 தொகுதிகள்ல போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கு. 14 தொகுதிகள்ல அதிகமா போட்டியிட்ட அதிமுக நியாயமா பார்த்தா
32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தல்ல பெற்றிருக்கணும். ஆனா, அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாதான் வாங்கியிருக்கு.
எளிமையா சொன்னா, 2019-ல சராசரியா ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்குன அதிமுக 2024-ல வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கு.
ஒவ்வொரு தொகுதிலயும் சராசரியா 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே
தெரியாதுனு நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க. காரங்களே நம்ப மாட்டாங்க!
கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரா பா.ஜ.க.வ கண்டிச்சாரா? புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்துன
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரா கீச்சுக்குரலிலாவது கத்துனாரா?
பிரதமர எதிர்த்துப் பேசுற துணிவு அவருக்கு இருக்கா? தி.மு.க என்றால் மட்டும் சட்டமன்றத்துலயும் கத்தி பேசுறாரு. வெளியிலயும் கத்திப் பேசுறாரு.பழனிசாமி அவர்கள் என்னதான் கத்துனாலும் எப்படித்தான் கதறுனாலும் அவரோட துரோகங்களும் குற்றங்களும்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும்.
நான் அவரை நோக்கி சவாலாவே கேட்குறேன்.தி.மு.க என்றால் கொள்கையும் அதை நிறைவேத்துவதற்கான தியாகமும்தான் அடிப்படை. உங்களோட அரசியலுக்கு என்ன அடிப்படை? துரோகத்தைத் தவிர உங்களுக்கு பெருமையா சொல்லிக்க என்ன இருக்கு? யார் கால்ல விழுந்து தவழ்ந்து பதவி வாங்குனீங்களோ அவங்களுக்கே
துரோகம் செஞ்சீங்க. யாரால கட்சிக்குள்ள வந்து எம்.எல்.ஏ, மந்திரி ஆனீங்களோ அவங்க வாழ்ந்த பங்களாவுலேயே கொள்ளையடிப்பதை உங்க ஆட்சியில வேடிக்கை பார்த்தீங்க. யார் தயவுல ஆட்சிய நடத்துனீங்களோ அவங்களோட கூட்டணி சேர்ந்தா கிடைக்கிற ஓட்டும் கிடைக்காதுன்னு கூட்டணியிலிருந்து விலகி நின்னீங்க. அப்புறம் அவங்க போட்ட கேஸ்களுக்கு பயந்து அவங்க கூடவே கள்ளக்கூட்டணி வச்சிக்கிட்டீங்க.
இப்பவும் எங்கள பாத்து கத்துற – கதறுற பழனிசாமி தன்னோட டெல்லி எஜமானர்கள
நினைச்சாலே பம்முறாரு – பதறுறாரு! பழனிசாமியோட வாழ்க்கை முழுக்க
துரோகம்! அவர், பாதம்தாங்கி பழனிசாமி மட்டுமில்ல; பயந்தாங்கொள்ளி பழனிசாமி. இவங்க கள்ளக் கூட்டணியா வந்தாலும் சரி – நேரடியா கூட்டணி அமைச்சு வந்தாலும் சரி – தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் இவங்க பேராபத்தானவங்கனு மக்கள்கிட்ட எடுத்துச் சொல்லணும். நாம ஏன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரணும்னு சொல்றஅதேநேரத்துல – யார் ஆட்சிக்கு வரக்கூடாது; ஏன் அவங்க வரக்கூடாதுனும்மக்களுக்கு புரிய வைக்கணும். அ.தி.மு.க. – பா.ஜ.க. – புதுசு புதுசா முளைக்குற கட்சிகளுக்குகிடைக்குற, ஊடக சொகுசு நமக்கு ஒருபோதும் கிடைக்காது!
இது இன்று நேற்றல்ல…75 வருசமா நாம் எதிர்கொள்ளுற சவால். அந்த சவாலையும் சாதனையாக்கித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கு. நம்மோட சொல்லாற்றல் – எழுத்தாற்றல் – மக்கள் நலன் ஆகியவற்ற நம்பித்தான் நாம செயல்படணும்.நம்மள எதிர்க்குறவங்க எல்லாருமே நமக்கு எதிரியா இருக்க தகுதியுடையவங்க இல்லை. தங்களுக்கு கவனம் கிடைக்கணும்னு ஆர்வக் கோளாறுல நம்ம எதிர்க்குறவங்களும் இருப்பாங்க.
அவங்களோட கவனச் சிதறல்களுக்கு ஆளாகிடாதீங்க,உண்மையான எதிரிகள வீழ்த்த உங்க ஆற்றல செலவிடுங்க! மகளிர்கிட்ட நம்ம ஆட்சி மேலபெரும் நம்பிக்கை இருக்கு. அவங்க நம்ம ஆட்சி மேல பெரிய மதிப்பு வெச்சிருக்காங்க. அதை முழுமையா நமக்கு ஆதரவான வாக்குகளா மாத்தணும். புதிய வாக்காளர்களான இளைஞர்களோட நம்பிக்கையையும் – மனசையும் வெல்லணும். அதுக்கு, அவங்களுக்கான மொழில பேசணும்! தொடர்ந்து டிரெண்ட்ல இருக்கணும்!
அடுத்த 15 மாதத்தில் கழகத்தோட ஒவ்வொரு அமைப்பும் திண்ணைப் பிரசாரம் – தெருமுனைக் கூட்டங்கள் போன்ற மூனு நிகழ்ச்சிகளையாவது நடத்தியிருக்கணும்!
ஒவ்வொரு பூத் மட்டத்துலயும் குறைந்தபட்சம் 30 விழுக்காடு பேர் உறுப்பினரா சேர்க்கப்படணும். ஏற்கெனவே பூத் கமிட்டிகள் அமைச்சு, 100 வாக்களர்களுக்கு ஒருத்தர்னு நியமிச்சிருக்கோம். அவங்க, தேர்தலுக்குள்ள எல்லா வாக்காளர்களையும் மூனு முறையாவது சந்திச்சிருக்கணும். வாக்காளர் பட்டியல்ல இருக்க வாக்காளர்களை குடும்பம் வாரியா பிரிச்சு ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க குடும்பங்களோட விவரங்களை விரல்நுனில வெச்சிருக்கணும். அவங்களோட தொடர்ச்சியா தொடர்புல இருக்கணும்.
திராவிட இயக்கத்தால கடந்த 75 ஆண்டுல தமிழ்நாடு எப்படி முன்னேறி இருக்கு, ஒவ்வொரு குடும்பத்துலயும் எப்படிப்பட்ட மாற்றத்த அது கொண்டு வந்திருக்குனு இளம் தலைமுறையினர் கிட்ட கொண்டு போகணும். அதுக்கு நீங்க ஒவ்வொருத்தரும் ஒரு ஊடகமா மாறணும்! தி.மு.க.வோட அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மட்டுமில்லாம, திராவிட இயக்கத்தின் தொண்டர்கள் ஒவ்வொருத்தர் முன்னாலயும் இருக்க அடிப்படைக் கடமை இது. குடும்பம் மற்றும் நண்பர்கள் சார்ந்த வாட்சப் குழுக்கள்ல நம்ம ஆட்சி அடுக்கடுக்கா நிறைவேத்திட்டு வர்ற திட்டங்களை, சாதனைகளை, பரப்பணும்.கழகம் தொடர்பான பொய்ச் செய்திகள், அவதூறுகளை முறியடிக்கணும்.
தமிழ்நாட்டுக்கு தி.மு.க.வின் கொள்கை ஏன் அவசியம்னு நாகரிகமான முறையில,
பொறுமையாஎடுத்துச் சொல்லணும். வரலாற்றுக் காலத்துல சோழர்கள் ஆட்சிய எப்படி பொற்காலம்னு சொல்றாங்களோ… அது மாதிரி மக்களாட்சி மலர்ந்த பிறகு,
தி.மு.க.வோட ஆட்சிக்காலம்தான் தமிழ்நாட்டோட பொற்காலம்னு
சொல்லணும்! தமிழ்நாட்ட வளர்த்தெடுத்தவங்க இந்த கருப்பு – சிவப்புக்காரங்கனு
சொல்லணும்! எந்நாளும் கொள்கைகளைக் காப்போம்!
வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு!” என்று பேசினார்.