Homeசெய்திகள்இந்தியாஅயோத்தி ராமர் கோவில் தலைமை பூஜாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

அயோத்தி ராமர் கோவில் தலைமை பூஜாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

-

- Advertisement -

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் வாழ்நாள் முழுவதும் சம்பளம் பெறுவார். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இந்த முடிவை எடுத்துள்ளது. ராமஜென்மபூமியில் கடந்த 34 ஆண்டுகளாக தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் சத்யேந்திர தாஸ்க்கு வயது 87.குடும்பத்துடன் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லும் நடிகர் சிரஞ்சீவி!

சத்யேந்திர தாஸை கோவில் பணிகளில் இருந்து விடுவிக்குமாறு கோவில் அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும், சத்யேந்திர தாஸ் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வந்து வழிபடலாம். நவம்பர், 25ல் நடந்த அறக்கட்டளை கூட்டத்தில், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சம்பளம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் சத்யேந்திர தாஸுக்கு வாழ்நாள் சம்பளம் வழங்க ஒப்புக்கொண்டனர்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், மார்ச் 1, 1992 முதல் ராமஜென்மபூமியில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார். ஆரம்ப காலத்தில் அவருடைய சம்பளம் மிகவும் குறைவு. மாதம் 100 ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார். ஆனால், தற்போது சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. இப்போது சத்யேந்திர தாஸ் மாதம் 38500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தலைமை அர்ச்சகர். இது தவிர மேலும் 13 அர்ச்சகர்கள் கோவிலில் பணியாற்றி வருகின்றனர். கோவிலில் புதிதாக 9 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் ஏற்கனவே இருந்தவர்கள். ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடந்தது. இப்போதும் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் இருக்கிறார்.

சத்யேந்திர தாஸ் கூறுகையில், ‘‘அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்தனர். உடல்நிலை, வயது அதிகரிப்பைக் காரணம் காட்டி, ராமர் கோவில் பணிகளில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், வாழ்நாள் முழுவதும் சம்பளம் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்’’எனத் தெரிவித்தார்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் சமஸ்கிருதத்தின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1975ல் சமஸ்கிருத வித்யாலயாவில் ஆச்சார்யா பட்டம் பெற்றார். 1976ல், அயோத்தியில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார்.

MUST READ