Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?... மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!

தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?… மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!

-

- Advertisement -

நாட்டிலேயே குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் வறுமை தமிழகத்தில் தான் மிக குறைவாக உள்ளதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுவாக நம்ம ஆட்கள் வேலை செய்வது கிடையாது, அவர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர். வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்கிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை சேர்த்து பார்க்கும்போது தான் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியும். அதுபோல் பார்க்கும்போது மக்கள் தொகை பெருக்கம் என்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளது. அதன் மூலம் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? ஆண்கள், பெண்கள் விவரம் என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில் வடமாநில தொழிலாளர்கள் ஏன் வருகின்றனர், தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது என்பன உள்ளிட்டவற்றை பல்வேறு இடங்களில் பார்த்ததை ஒன்றாக சேர்த்து பார்க்கும்போதுதான் நமக்கு பொதுவான பார்வை ஏற்படும். அப்போதுதான் புரிதல் மேலும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது!

தமிழ்நாட்டை பார்த்தோம் என்றால் நாட்டிலேயே குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருந்தால், 1400 குழந்தைகள் தான் உள்ளனர். இதனால் என்ன ஏற்படும் என்றால், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறையும். மற்றொருபுறம் கல்வியை பரவலாக்குவதல் நடைபெறுகிறது. அனைத்து தரப்பில் உள்ள குழந்தைகளையும் கல்விக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதுமைப் பெண் திட்டம் கொண்டு வந்துள்ளோம். இத்திட்டத்தின் மூலம் அரசு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை வீதம் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 16 வயதுக்கு மேல் 32 வயதுக்குள் உள்ளவர்களில் 52 சதவீதம் பேர் பள்ளி, கல்லுரிகளில் படிக்க சென்றுவிட்டனர். இதனால் பாதி பேர் தான் வேலை செய்ய உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு டிமாண்ட் உள்ளது என பாருங்கள். எனவே அதிக சம்பளம் தரும் இடத்திற்குதான் அவர்கள் வேலைக்கு செல்வார்கள். வேலைக்கு ஆட்கள் வரவில்லை என சொல்பவர்கள் உண்மையில் அவர்களுக்கான சம்பளத்தை தர முடியவில்லை என்பதுதான் அர்த்தம்.

"அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நாட்டிலேயே வறுமை என்பது மிகவும் குறைவாக உள்ளது தமிழ்நாட்டில் தான். தமிழநாட்டில் 1.5 முதல் 2 விழுக்காடுதான் வறுமை உள்ளது. இதனை நித்தி அயோக் அமைப்பு தெரிவிக்கிறது. நாம் கேரளாவை விட தமிழகம் குறைவு. வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் இது எப்படி சாத்தியமாகும். நாம் முழுமையாக பெண்களுக்கு இலவசமாக கல்வி வழங்கவில்லை. கல்லூரிகளில் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன. ஒரு காலத்தில் நாட்டின் சராசரி வருவாயை விட தமிழ்நாட்டின் வருவாய் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய சராசரியை விட இரண்டு மடங்கு தமிழ்நாடு உள்ளது. இது சாத்தியமானது எப்படி? இதெல்லாம் சேர்ந்துதான் ஆட்கள் பற்றாக்குறை, வெளி மாநில தொழிலாளர்கள் வருகை என எல்லாம் கணக்கிட வேண்டியுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்க இருந்தனர். ஆனால் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றதால் அவர்களால் பங்கேற்க முடியவில்லை. நேற்றிரவு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா என் வீட்டிற்கு வந்து, புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார்? அது நெகிழ்ச்சியாக இருந்தது. கடந்த முறை தேர்தல் முடிந்தபோது, நன்றி சொல்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எனது வீட்டிற்கு வந்திருந்தார். என்னிடம் பேசிவிட்டு புறப்படும்போது, நீங்கள் வெளிநாட்டிற்கு பையனுடன் சென்று இருக்கப் போவதாக கேள்விபட்டேன். நீங்கள் அதுபோல போகக் கூடாது. எங்களுடன்தான் பயணிக்க வேண்டும். எங்களுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். நானும் மரபுக்காக சரி என்று சொல்லியிருந்தேன்.

சில நாட்களுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். அப்போது, தம்பி உதயநிதி ஸ்டாலின் உங்களிடம் சொன்னாரா? என்றார். ஆமாம் என்றேன். சரி வாருங்கள் பேசுவோம் என்றார். அப்படி தொடங்கிய பயணம் தான் தமிழ்நாடு திட்டக்குழு துணை தலைவர் பொறுப்பு என்பது. அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், எனக்கு மிகப்பெரிய கவுரவத்தையும், வாய்ப்பை வழங்கியுள்ளனர். இதுவரை நான் நன்றி சொன்னது இல்லை. அவர்கள் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

MUST READ