இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் அடுத்தபடியாக இவரது இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும் இதில் இடம்பெற்ற வசனங்களும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் விடுதலை 2 ஓடிடியில் வெளியாகும் போது கூடுதலாக ஒரு மணி நேரம் இருக்கும் என வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருக்கிறார். அதன்படி அவர் கூறியதாவது, “விடுதலை 2 டைரக்டர் கட் கூடுதலாக ஒரு மணி நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே ஓடிடியிலும் ஒரு மணி நேரம் கூடுதலாக வெளியிடப்படும். முதல் பாகத்தில் திரைப்பட விழா வடிவம் 4 மணி நேரம், இரண்டாம் பாகமும் கிட்டத்தட்ட 4 மணி நேரம் இருக்கும். இதையெல்லாம் சேர்த்து மொத்தம் எட்டு மணி நேரம் இருக்கிறது. அதை வைத்து 4 பாகங்கள் பண்ணலாம்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -