இணையதள பங்கு வர்த்தகம் எனக்கூறி, கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.32.19 லட்சம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை விளாங்குறிச்சி, சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (53), இவர் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நரசிம்மன் இணையதளம் மூலம் பங்கு வர்த்தகமும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் பங்கு சந்தை தொடர்பான விளம்பரம் வந்துள்ளது. அதனை நரசிம்மன் பின் தொடர்ந்த நிலையில், அவரது செல்போன் எண் வாட்ஸ் குழுவில் இணைக்கப்பட்டதுள்ளது.
பின்னர் அதில் தனியார் நிறுவனத்தின் பெயரில் இருந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பங்கு வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நரசிம்மன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பல தவணைகளில் ரூ.32.19 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அதில் லாபம் வந்ததாக செயலியில் காண்பித்த நிலையில், அந்தப் பணத்தை நரசிம்மன் எடுக்க முயன்ற போது பணம் எடுக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரசிம்மன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரேயொரு போன் கால்; வங்கி மேலாளரிடம் 9.5 லட்சம் அபேஸ் – சைபர் கிரைம் மோசடியாளர்கள்