Homeசெய்திகள்தமிழ்நாடுமரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!

-

- Advertisement -

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில்  ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த லோகேஷ்(24),விக்ரம்(22),  சூர்யா (22) ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள் ஆவர். இவர்கள் நேற்று மாலை பக்கிங்காம் கால்வாயில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டுள்ளனர். அப்போது திடீரென அதிகரித்த வெள்ளத்தில் சிக்கி லோகேஷ் அடித்து சென்று உள்ளார். இதைப் பார்த்து அவரது தம்பிகள் அண்ணனைக் காப்பாற்ற தண்ணீரில் குறித்து உள்ளனர்.

ஆனால் கட்டுக்கடங்காத சென்ற வெள்ளத்தின் காரணமாக இந்த மூன்று பேரும் வெள்ளத்தில் அடித்து சென்று மாயமானார்கள். இவர்களை நேற்று மாலை முதல் தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் விசைப்படகுகள் மூலம் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 8.30  மணிக்கு அண்ணன் லோகேஷின் உடல் அவர் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவருடைய தம்பிகள் இருவரையும் தொடர்ந்து தேடும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ