தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், டிசம்பர் 12ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டிலை இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் நடந்த நிலையில் திருமணம் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத்தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலியுடன் பேபி ஜான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில் நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் செல்ல தங்கை மற்றும் அன்பு மாப்பிள்ளை, உங்கள் மன வாழ்வு என்றும் மகிழ்ச்சியும் நேசமும் நிரம்பி, அழகான நினைவுகளால் நிறைந்ததாய் தொடரட்டும். ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து வாழ வாழ்த்துக்கள்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டிலுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்தியிருக்கிறார்.
ஏற்கனவே சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து ரஜினி முருகன், சாமி 2, அண்ணாத்த ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.