Homeசெய்திகள்தமிழ்நாடு"கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்

-

- Advertisement -

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நம் மாணவர்கள் எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய முடியும், நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் தொடர்ச்சியாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

 "கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றது. அந்த 29 பைசா வைத்துக் கொண்டு என்ன செய்வது?” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் தள பதிவில்,

”கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்.

இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.

ஓடிடியில் ‘விடுதலை 2’ கூடுதலாக 1 மணி நேரம் இருக்கும்…. இயக்குனர் வெற்றிமாறன்!

 

MUST READ