வேளாண் பட்ஜெட்- ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு
உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதன்பின் உரையாற்றிய அவர், “தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் சாகுபடு பரப்பு 63.48 லட்சம் ஹெக்டேராஜ அதிகரித்துள்ளது. மகசூலை அதிகரிப்பதே இலக்கு”..நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு. தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் – ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்படும், சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உதவும். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். 127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். 2504 ஊராட்சிகளில் ரூ230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும்.ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் வழங்கப்படும்.
” எனக் கூறினார்.