Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடுவது யார்? அமைச்சர் முத்துசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடுவது யார்? அமைச்சர் முத்துசாமி

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சியினர் தங்களது விருப்பத்தை தெரிவித்தாலும், யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை  கூட்டணியில் கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பார்கள். எந்த முடிவானாலும்,  கூட்டணி முடிவை நாங்கள் இங்கு அமல்படுத்துவோம் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளாா்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடுவது யார்? அமைச்சர் முத்துசாமி

2026 தேர்தலில் 200.க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் ஆதாரத்தின் அடிப்படையில் தான் கூறி உள்ளார். வட மாநிலங்களை சேர்ந்த சில அமைப்புகள், பொது நிறுவனங்கள் எடுத்த சர்வே  ரிபோர்ட் அடிப்படையில் முதலமைச்சர் இதனை கூறி இருக்கிறார். ஈரோடு வருகையின் போது மக்கள் வரவேற்பு மற்றும் எழுச்சியை பார்த்து 200.க்கும் மேல் வெற்றி என்பதை முதல்வர் உறுதிபட கூறி இருக்கிறார்.

அத்திகடவு அவிநாசி திட்டம், ஈரோடு ஜவுளி வணிக வளாகம் போன்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் முறையாக திட்டமிடாமல் பணிகளை தொடங்கினார்கள். அவற்றையெல்லாம் இன்று வரை சரிசெய்து வருகிறோம்.  எதிர்கட்சியினர் எங்களை பாராட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அப்படி தான் எடப்பாடி பாராட்டுவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் எங்களின் பணியை இன்னும் வேகப்படுத்துகின்றன  என கூறியுள்ளாா்.

கட்டாய தேர்ச்சி ரத்தை திரும்பப்பெறுக – ராமதாஸ்

 

MUST READ