Homeசெய்திகள்அரசியல்ஒரு சீட்டுக்கூட வேண்டாம்... திமுகவுக்கே ஆதரவு... அன்புமணியின் ஒரே ஒரு நிபந்தனை..!

ஒரு சீட்டுக்கூட வேண்டாம்… திமுகவுக்கே ஆதரவு… அன்புமணியின் ஒரே ஒரு நிபந்தனை..!

-

- Advertisement -

வன்னியர்களுக்கு 15 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்தீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் தி.மு.க.,விற்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவளிப்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ற நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்றார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசுக்கு மனதில்லை. திமுக துரைமுருகனை துணை முதல்வராக்காதது ஏன்? உடனடியாக 15% வன்னியர் இடப்பங்கீடு திமுக கொடுத்தால் வரும் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம். ஒரு சீட்டு கூட வேண்டாம். தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 24ம் தேதியுடன், 1,000 நாட்கள் ஆகின்றன.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதியின் அடிப்படை. இல்லாத காரணங்களை கூறி, ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள், வன்னியர்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது’’ என அவர் கூறினார்.

‘‘பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஜாதி கட்சி இல்லை. அது அனைத்து தமிழர்களுக்குமான கட்சி என்று சொல்வீர்களே. ஆனால், எப்போதுமே வன்னியருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறீர்கள். அப்படியானால் பாமகவை ஜாதி கட்சி என்று தானே சொல்வார்கள்’’ என்றும் எதிர்த்தரப்பினர் முனுமுனுக்க்கிறார்கள்.

MUST READ