சூது கவ்வும் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் டார்க் காமெடி ஜானரில் சூது கவ்வும் எனும் திரைப்படம் வெளியானது. நலம் குமாரசாமி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து மிர்ச்சி சிவா, கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் எனும் திரைப்படம் உருவானது. இந்தப் படம் கடந்து டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை SJ அர்ஜுன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா வழக்கமாக தனது நகைச்சுவையால் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் முதல் பாகத்தில் வரும் சில காட்சிகள் அப்படியே ரீப்ரியேட் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் முதல் பாகம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை போல் இரண்டாம் பாகம் ரசிகர்களை கவரவில்லை. அதன்படி இந்த படம் நெகட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.