இன்று ஓடிடியில் வெளியான படங்கள்
RRR: பிஹைண்ட் அண்ட் பியான்ட்
கடந்த 2022-ல் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படம் உருவான விதம் ஆவணப்படமாக வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆவணப்படம் RRR: பிஹைண்ட் அண்ட் பியான்ட் என்ற தலைப்பில் இன்று (டிசம்பர் 27) நெட்பிளிக்ஸில் வெளிவந்துள்ளது.
அந்தகன்
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம் தான் அந்தகன். இந்த படத்தை தியாகராஜன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரசாந்த் தவிர சிம்ரன், சமுத்திரக்கனி, கார்த்திக், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (டிசம்பர் 27) சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய இரண்டு தளங்களிலும் வெளியாகியுள்ளது.
ஒயிட் ரோஸ்
கயல் ஆனந்தி நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் ஒயிட் ரோஸ் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கயல் ஆனந்தியுடன் இணைந்து ஆர்.கே. சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை கே. ராஜசேகர் இயக்கியிருந்தார். திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் இன்று (டிசம்பர் 27) சிம்ப்ளி சௌத் தளத்தில் வெளியாகியுள்ளது.
சொர்க்கவாசல்
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் சொர்க்கவாசல். இந்த படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருந்தார். இதில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து செல்வராகவன், நட்டி நடராஜ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜெயில் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார். இந்த படம் இன்று (டிசம்பர் 27) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஜாலியோ ஜிம்கானா
பிரபுதேவா ,மடோனா செபாஸ்டியன், அபிராமி யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்த திரைப்படம் தான் ஜாலியோ ஜிம்கானா. இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். இந்த படம் இன்று (டிசம்பர் 27) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.