- Advertisement -
ஷாருக்கானின் ‘பதான்’ நாளை ஓ.டி.டி.யில் வெளியாகிறது!
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி பதான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி ஆடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்தது. முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. பதான் திரைப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.