Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்

-

- Advertisement -

விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் 14 ஆயிரம் கோடி அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Image

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார் பட்ஜெட் உரையில், கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு விதமான பூச்சிகள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்,பூச்சிகளைப் பற்றிய புரிதல் இருந்தால் தான் அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

2022 – 23 ஆம் ஆண்டில் இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12 ஆயிரத்து 648 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும், இது கடந்த 10 ஆண்டு சராசரியை விட 89 சதவிகிதம் அதிகம் எனவும் அமைச்சர் பேசினார். வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

அதே போல் ஆடு,மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக்கடனாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் அளவில் வழங்கப்படும் எனவும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Image

அயல்நாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது ஊக்கத்தை உண்டாக்கும் என்பதால் இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு தமிழக உழவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 150 முன்னோடி விவசாயிகள் அயல்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் பட்ஜெட் உரையாக அமைச்சர் அறிவித்தார்.

பாடப்புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, பழ மரங்களை மாணவர்கள் நேரடியாக காண வேண்டும் எனபதற்காக கல்வித்துறையுடன் இணைந்து பண்ணைச் சுற்றுலா செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மாணவ சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த சுற்றுலாவுக்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

MUST READ