Homeசெய்திகள்அரசியல்கழக மூத்த முன்னோடிகளுக்கு நான் சின்னவர் - உதயநிதி

கழக மூத்த முன்னோடிகளுக்கு நான் சின்னவர் – உதயநிதி

-

- Advertisement -

பல இடங்களில் பட்டப்பெயராக என்னை ‘சின்னவர்’ எனக் கூறுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை நம்பிக்கையும் இல்லை ஆனால் கழக மூத்த முன்னோடிகள் உங்கள் முன்னால் நான் தான் சின்னவர் என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் 100 மூத்த முன்னோடிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பொற்கிழி மற்றும் வேட்டி சேலைகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சி பேசிய அமைச்சர் உதயநிதி;

கழகத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் இருந்தாலும் எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான நெகிழ்வை தரக்கூடிய நிகழ்ச்சி என்றால் இந்த கழக மூத்த முன்னோடிகளை சந்தித்து பொருட்களை வழங்கி பெருமைப்படுத்துவது தான் என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள மாவட்ட செயலாளரிடமும், அமைச்சரிடமும் முதலில் சொல்லுவது எனக்காக ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடம் அன்பு கட்டளை இடுவேன்.

அது என்னவென்றால் அங்குள்ள மூத்த முன்னோடிகளை வரவழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன் என்றார். காரணம் அவர்கள் இல்லாமல் கட்சி கிடையாது, கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக ஆனதற்கு காரணம் நீங்கள் தான் தற்போது உள்ள தலைவர் முதலவர் ஆனதர்க்கும் நீங்கள் தான் காரணம். உங்களுக்கு தெரிந்ததெல்லாம் கருப்பு சிவப்பு பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் கொள்கை அவ்வளவு தான், கட்சியை வளர்ப்பது அவர்கள் தான் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்றபோது நான் குழப்பத்தில் இருந்தேன், மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்று தயக்கம் இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு பதிலாக பகுதி செயலாளராக உள்ள மதன் மோகன் தான் வேட்பாளராக நிற்க வேண்டிய தொகுதியில் நான் நின்றேன் என்றார்.

சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்யப்பட்ட சில திட்டங்களை பட்டியலிட்டார் உதயாநிதி, வார்டு 62 உலகப்பா தெருவில் 22 லட்சம் ரூபாயில் ரேஷன் கடை, 63 வட்த்தில் 22 லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி, 115 வது வட்டத்தில் 37 லட்சம் ரூபாயில் 2 ரேஷன் கடைகள், 114 வட்டத்தில் 8 லட்சம் மற்றம் 2 லட்சம் செலவில் இரண்டு கான்கிரீட் சாலை அதோடு 6 ஸ்மார் கிளாஸ் ஏறப்படுத்த 22 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக பட்டியலிட்டார்.

தனது சொந்த செலவில் ராயப்பேட்டை ரத்த வங்கிக்கு தேவையான பொருட்களை வாங்கி தந்துள்ளதாகவும் கூறினார். மேலும் போக்குவரத்து காவலர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் 25 சாலை முகப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்ற புதிய குழாய்கள் அமைக்கும் பணிகள் செயப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் உள்ள மாணவர் மாணவியருக்கு கல்வி ஊக்க தொகை ஒன்றரை கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். பெண்களுக்கு இலவச தையல் மெஷின் கொடுத்துள்ளோம்.

அது மட்டுமல்லாமல், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தியது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றால் அது சேப்பாக்கம் தொகுதி தான் என்றார்.

அதேபோல கஸ்தூரிபாய் மருத்துவமனையில் எனது அறக்கட்டளையின் சார்பில் அறுவை சிகிச்சை அறை, ஆம்புலன்ஸ், விளையாட்டு திடல்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 15 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாத தெருக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கபட்டுள்ளது.

தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் சேப்பாக்கத்தின் செல்ல பிள்ளை என்று தான் அழைப்பார்கள். நானும் என்னுடன் உள்ளவர்களும் சேப்பாக்கம் தொகுதியில் கால் வைக்காத இடங்களே கிடையாது என்றவர் இன்னும் கொஞ்ச நாளில், இந்த தொகுதியில் உள்ளவர்களை பேர் சொல்லி கூப்பிடுவேன் என்றார். கலைஞர் அறக்கட்டளை உள்ளது அதில் இருந்து மாதத்தில் எட்டு பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க படுகிறது.

உங்களை பார்கையில் எனக்கு பெருமையாகவும் இருக்கும் பொறாமையாகவும் இருக்கும் காரணம் உங்களின் அனுபவம் எனக்கு கிடையாது. என்னை பல இடங்களில் சின்னவர் என கூப்பிடுவத்தில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது, ஆர்வமும் கிடையாது . ஆனால் இந்த மேடைக்கு அது பொருத்தமானது உங்கள் அணைவரை விட நான்தான் சின்னவர் என்றார்.

பெரியாரை பார்த்தது கிடையாது, பேரறிஞர் அண்ணாவை பார்த்தது கிடையாது கலைஞரையும், அன்பழகன் தாத்தாவையும் பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால் நீங்கள் அப்படி கிடையாது பெரியார், அண்ணா, கலைஞர் என மூவரையும் பார்த்து தேர்தல் பணிகள் ஈடுபட்டிருப்பீர்கள். எனவே உங்களை நான் அவர்கள் அனைவரின் மறு உருவமாக பார்க்கிறேன் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்;

நாளை நடைபெற உள்ள போட்டியை காண்பதற்கு நானும் ஆர்வமாக உள்ளேன் டிக்கெட் கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள். நானும் போட்டியை காண முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் டிக்கெட் தான் கிடைக்கவில்லை என நகைச்சுவையாக பதிலளித்தார்.

நீட் ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி சில இடங்களில் காமெடியாக பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு சட்ட மசோதாவை டெல்லிக்கு அனுப்பி அதை இரண்டு முறை திருப்பி அனுப்பியதை மக்களிடம் சொல்லாத கேவலமான ஆட்சி அதிமுக.

நீட் விவகாரத்தில் திமுக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நாங்கள் மக்களிடம் தெளிவாக கூறுகிறோம். நான் கேட்கிறேன், ஆளுநர் மாளிகை முன்போ அல்லது மத்திய அரசுக்கு எதிராக போராட்டமோ நடந்தால் வந்து கலந்து கொள்ள அவருக்கு தைரியம் உள்ளதா? அதற்கு அவர் (எடப்பாடி பழனிச்சாமி) பதிலளிக்கட்டும். அதன் பின்னர் நான் பதில் கூறுகிறேன் எனத் தெரிவித்தார்.

MUST READ