Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

சென்னையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!

-

- Advertisement -

மாதவரம் பகுதியில் 1.5 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைபொருள் வைத்திருந்த வழக்கில் மேலும் 1 பெண் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு 15.90 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.

சென்னையில் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!சென்னை இ.கா.ப.,அவர்கள் பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், திரு.ஆ.அருண், போதைப்பொருளுக்கெதிரான (Anti Narcotic Intelligence Unit ANIU) என்ற பிரிவு தொடங்கப்பட்டு, நுண்ணறிவுப்பிவு துணை ஆணையாளர் மேற்பார்வையில், ANIU பிரிவு உதவி ஆணையாளர் தலைமையில், ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினர் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து, போதைப் பொருட்கள் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை போதைப்பொருள் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 50 நெட்வொர்க் குற்ற குழுவினரை தகுந்த புலனாய்வு மேற்கொண்டு, கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுதந்திரமாக சுற்றிய பாலியல் குற்றவாளி ஞானசேகரன்: மகளிர் ஆணையம் குற்றச்சாட்டு..!

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல், போதை பொருளுக்கெதிரான நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினர் கடந்த 21.12.2024 அன்று மாதவரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த வெங்கடேசன் (எ) ராஜேஷ், த/பெ.விஸ்வநாதன் மற்றும் கார்த்திக், த/பெ.கிருஷ்ணன் ஆகிய இருவர் மீது M-1 மாதவரம் காவல் நிலைய குழுவினருடன் ஒருங்கிணைந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டலம், கொளத்தூர் காவல் மாவட்டம், புழல் சரகம், M-1 மாதவரம் காவல் நிலையம், கடந்த 21.12.2024-ஆம் தேதி மாதவரம் பகுதியில் வெங்கடேசன் (எ) ராஜேஷ், த/பெ.விஸ்வநாதன் மற்றும் கார்த்திக், த/பெ.கிருஷ்ணன், திருவல்லிகேனி, சென்னை ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 1.5 கிலோ (1 கிலோ 500 கிராம்) எடையுள்ள மெத்தம்பட்டமைன் (Methamphetamine Drug) என்ற போதை பொருள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு, மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 30.12.2024 ஆம் தேதி எதிரி வெங்கடேசன் என்பவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் 15.900 கிலோ கிராம் மெத்தப்பட்டமைன் ரெட்ஹில்ஸ், வடகரையில் கைப்பற்றப்பட்டது. மேற்படி வெங்கடேசன் (எ) ராஜேஷ் பஞ்சாப் மாநிலம், பட்டியலா மாவட்டத்தில் போதை பொருள் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேற்படி எதிரி 7 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து 2021-ஆம் ஆண்டு விடுதலையாகியுள்ளார்.

இவர் அவருடைய உறவினரான கொடுங்கையூரை சேர்ந்த பிரபு மற்றும் ஊரப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் ஆகியோருடன் இணைந்து ஹரியானா மற்றும் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு மெத்தப்பட்டமைன் மற்றும் அதனை தயாரிக்கும் மூலப்பொருளான Pseudoephedrine ஆகியவற்றை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை மேற்கொண்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும் விசாரணையில் சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீத் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் 30.12.2024-ஆம் தேதி கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 128 கிராம் மெத்தப்பட்டமைன் கைப்பற்றப்பட்டது. மேலும், அவர்கள் மேற்படி போதை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த லாபத்தில் வாங்கப்பட்ட இரண்டு வீட்டு சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், வெங்கடேசனுக்கு மெத்தப்பட்டமைன் வாங்கி விற்பனை செய்த குற்றத்தில் கூட்டாளியாக இருந்த அவரது மனைவி ஜாவச மெரிடா மற்றும் சென்னையை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் 30.12.2024-ஆம் தேதி கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 157 கிராம் மெத்தப்பட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் மற்றும் முருகன் ஆகியோர் 30.12.2024-ஆம் தேதி கைது செய்யப்பட்டு. அவர்களிடமிருந்து 150 கிராம் மெத்தப்பட்டமைன் ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இதுவரை 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 17.815 கிலோ கிராம் மெத்தப்பட்டமைன். மூன்று நான்கு சக்கர வாகனங்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் வழக்கில் சம்மந்தப்பட்டவர்களிமிருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை நான்கு வீடுகளில் கைப்பற்றப்பட்ட மெத்தப்பட்டமைனின் மதிப்பு சுமார் 17 கோடி . இக்குற்றத்தின் மூலம் சம்பாதித்த சொத்துக்களான வீடுகள் மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 5 கோடி ஆகும்.

இவ்வழக்கில் மேலும் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள். போதை பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டு, யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை கண்டறியவும். வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள பிற குற்றவாளிகளை கைது செய்யவும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தற்போது புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் சொத்துக்களை சட்டப்படி முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறுப்பிடதக்கது.

MUST READ