Homeசெய்திகள்தமிழ்நாடுபோதை பொருள் கடத்தியர்களை போலீசில் சிக்க வைத்த கூகுள் மேப்

போதை பொருள் கடத்தியர்களை போலீசில் சிக்க வைத்த கூகுள் மேப்

-

போதை பொருள் கடத்தியர்களை போலீசில் சிக்க வைத்த கூகுள் மேப்

பண்ருட்டியில் கூகுள் மேப் பார்த்து கொண்டு காரில் போதைப் பொருட்கள் கடத்தி வந்தவர்கள் ஒரு வழிச்சாலையில் வந்து சிக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நான்கு முனை சாலையில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு வழிச்சாலையில் வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது கூகுள் மேப் உதவியுடன் வந்ததால் ஒரு வழிச்சாலை என்பது தெரியவில்லை என்று போலீசாரிடம் காரில் வந்த வாலிபர்கள் தெரிவித்தனர். மேலும் சந்தேகப்படும் நபர்கள் போல் இருப்பதால் காரை சோதனை செய்ததில் காரின் பின்பக்கம் மூட்டை மூட்டையாக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான், மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. உடனே பண்ருட்டி காவல் நிலையத்திற்கு போக்குவரத்து காவலர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28), அவருடைய நண்பர் டிரைவர் மணிகுமார் (வயது 27) ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து கடலூருக்கு பண்ருட்டி வழியாக ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான ஆறு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் காரில் கடத்தி சென்று விற்பனை செய்யப் போவதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பண்ருட்டி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் போலீசார் போதை பொருட்கள் கடத்திய இரண்டு வாலிபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து காரில் கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ