சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மண் அடுப்பில் விறகு வைத்து சமையல் செய்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த எட்டு ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு சமையல் எரிவாயு விலையை ஏற்றி வரும் ஒன்றிய அரசை கண்டித்து, திருவெற்றியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சமையல் எரிவாயு உயர்வினால் விலைவாசிகளும் உயர்ந்துள்ளதால் சமையல் எரிவாயு விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தினர மண் அடுப்பில் விறகு வைத்து சமையல் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
விடுதலை சிறுத்தை கட்சியினர், பாஜக நிர்வாகி எச். ராஜாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கத்தினர் இணைந்து விலைவாசி உயர்வு, சமையல் எரிவாயு விலையை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.