Homeசெய்திகள்க்ரைம்கிரெடிட் கார்டு விவகாரத்தை தீர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கி மோசடி-போலி வக்கீல் கைது!

கிரெடிட் கார்டு விவகாரத்தை தீர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கி மோசடி-போலி வக்கீல் கைது!

-

- Advertisement -

சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் சரவணன் வயது 42. அஇஅதிமு  முன்னாள்  மாவட்ட பிரதிநிதி. குடும்ப செலவிற்காகவும் தன்னுடைய மருத்துவ செலவிற்காகவும் தனக்கு தெரிந்த நண்பர் பாலாஜி என்பவரின் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கடன் மூலமாக சுமார் ரூ 11 லட்சம்  கடன் பெற்று இருந்தார். கடந்த 2024 ஆண்டு பேஸ்புக் மூலமாக  வினோத்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

பேங்க் மூலமாகவும் கிரெடிட் கார்டு மூலமாகவும் ரூபாய் 11 லட்சம் கடன் பெற்று இருப்பதால் வங்கியில் இருந்து தன்னை பணத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்தி வருவதால் அதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என அவரிடம் சரவணன்  கேட்டுள்ளார். நான் ஒரு வக்கீல் தான் என்று ஏமாற்றி போலியான ஆதாரங்களைக் காட்டி  லோக் அதாலத் மூலமாக வழக்கு பதிவு செய்து வங்கியில் இருந்து தொந்தரவு செய்யாமல்  இருக்கவும் கட்ட வேண்டிய பணத்தை இன்சூரன்ஸ் மூலமாக கழித்து விடலாம் என்றும் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.

கிரெடிட் கார்டு விவகாரத்தை தீர்த்து வைப்பதாக கூறி பணம் வாங்கி மோசடி-போலி வக்கீல் கைது!ஐகோர்ட் வளாகத்திலும் வினோத்குமாரை சரவணன் சந்தித்துள்ளார். அப்போது வழக்கறிஞர் கட்டணமாக கூகுள் பே மூலமாகவும். தனிப்பட்ட முறையிலும் ரூபாய் 2,38,000 கொடுத்து  ஏமாந்துவிட்டதாக ஐகோர்ட் வளாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணைக்கு போலீசார் வினோத்குமாரை அழைத்த போது அவர் வரவில்லை.

இந்த நிலையில் வினோத்குமாரின் இரண்டாவது மனைவி நாகலட்சுமி(33) (தலை மறைவு ) என்னுடைய கணவரை போன் போட்டு தொந்தரவு செய்தால் உன்னை ஆளை வைத்து கொன்று விடுவேன் சரவணனை போனில் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் ஐகோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் இருந்து கருப்பு நிற வக்கீல் கவுன், கருப்பு நிற வக்கீல் கோட் , சிவப்பு நிற அட்வகேட் சிம்பிள் பேனா ,TN 04 BA 8562 மாருதி ஷிப்ட்  கார் மற்றும் அட்வகேட் விசிட்டிங் கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அயனாவரத்தைச் சேர்ந்த வினோத்குமார் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு கல்லூரியில் எல்எல்பி சேர்ந்துள்ளார். ஆனால் படிப்பை முடிக்கவில்லை.

 

இந்த நிலையில் போலியான அடையாள அட்டை தயாரித்து வக்கீல் என கூறிக்கொண்டு ஐகோர்ட் வளாகத்திலும், சென்னையில் உள்ள இதர நீதிமன்ற வளாகங்களிலும் சுற்றி திரிந்ததும் பலரை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. அயனாவரத்தில் கொன்னூர் நெடுஞ்சாலையில் அலுவலகம் வைத்து பலரை ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது. அவரை  போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ