Homeசெய்திகள்சென்னைதாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் - பொதுமக்கள் சாலை மறியல்!

தாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் – பொதுமக்கள் சாலை மறியல்!

-

- Advertisement -

தாம்பரம் அருகே புத்தூர், மப்பேடு சாலை குடியிருப்பு பகுதிகளில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டபடுவதால் சுற்றுவட்டத்தில் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சமாதனாம் செய்ய வந்த ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவர் கணவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் - பொதுமக்கள் சாலை மறியல்!சென்னை தாம்பரம் அடுத்த புத்தூர்-மப்பேடு, ஆலப்பாக்கம் புத்தூர் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன, இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருப்பு பகுதிகள் அருகே கடந்த ஒரு வருடமாக விமானப்படை தளத்தில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் மப்பேடு, திருவஞ்சேரி,நெடுங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கபடும் குப்பைகளும் தினமும் சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து டன் கணக்கில்  குப்பைகள்  கொட்டபடுகின்றன.

தாம்பரம் அருகே மப்பேடு சாலையில் டன் கணக்கில் குப்பைகள் - பொதுமக்கள் சாலை மறியல்!இதனால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாகவும், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் காய்ச்சல் ,மூச்சுதிணறல் ஏற்பட்டு  முதியவர்கள் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கபட்டு வருவதாக அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  குப்பை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து  மறியல்   மப்பேடு,ஆலப்பாக்கம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பல முறை இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஊராட்சி தலைவர்களிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

பின்பு வந்த நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவி வனிதா சீனிவாசன் மற்றும் அவரது கணவர் சீனிவாசன் ஆகியோரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து  உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

MUST READ