மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவன்
திருப்பத்தூர் அருகே தனது மனைவிக்காக அவரது கணவர் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயிலை கட்டி எழுப்பிருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த மான்கானுர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஈஸ்வரி மரணம் அடைந்தார். மனம் உடைந்தார் சுப்பிரமணி. மனைவியின் இழப்பு தாங்க முடியாத வேதனையில் ஆழ்த்தியது அவரை.
இதற்காக தனது மனைவிக்கு கோயிலை கட்ட முடிவு செய்தார். மனைவி கூட இருப்பது போன்று உணர வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்தார். மகன்களின் உதவியுடன் மனைவிக்கு கோயிலையும் கட்டி ஆறு அடி உயரத்தில் தத்ரூபமான சிலையையும் வடித்துள்ளார். மனைவியை இழந்து தவிக்கும் தனது நிலை யாருக்கும் வரக்கூடாது என்று கண்களில் நீர் ததும்ப கூறுகிறார் அவர்.
உறவுகளுக்கு உணவளிக்காத இன்றைய காலத்தில் இறந்த மனைவிக்கு கணவர் சிலை அமைத்து கோயில் கட்டி தினமும் வணங்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. காதலை உரக்கச் சொல்லி கம்பீரமாக நிற்பது தாஜ்மஹால் மட்டுமல்ல சுப்ரமணிய கட்டி இருக்கும் கோயிலும்தான்.