கோதுமை புல் சாறு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
நம்மில் பலருக்கு கோதுமை புல் சாறு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. கோதுமை புல் சாறு என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்கும் பலரையும் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த கோதுமை புல் சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்தால் அதை யாரும் தவிர்க்க மாட்டார்கள். அதாவது புதியதாக வெட்டப்பட்டு இருக்கும் கோதுமை புல்லை தண்ணீரில் நன்கு கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதனை அப்படியே மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதில் இருந்து சாறை மட்டும் தனியாக வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாறை அப்படியே பருகலாம் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். இந்த கோதுமை புல் சாறை அப்படியே எடுத்துக் கொள்வதால் நமக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன. அதன்படி கோதுமை புல் சாற்றில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. மேலும் கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களும் கிடைக்கிறது. அடுத்தது இதில் உள்ள நார் சத்துக்கள் மலச்சிக்கல் தீர வழிவகை செய்யும். அதேசமயம் இதில் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளும் காணப்படுகிறது. எனவே இந்த சாறு சருமத்தில் உண்டாகும் சுருக்கங்கள் ஆகியவற்றுக்கு நல்ல தீர்வு தரும். சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இது நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி நம் ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இந்தக் கோதுமை புல் சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது