ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கிங்ஸ்டன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ், தற்போது ஹீரோவாகவும் பாடகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் இவர், கிங்ஸ்டன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கி வரும் இந்த படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் இணைந்து பேச்சுலர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அடுத்தது கிங்ஸ்டன் திரைப்படத்தில் யோகி பாபு, ஆண்டனி, இளங்கோ குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷே தயாரித்து நடித்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோகுல் பினாய் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பினை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் ஹாரர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. அத்துடன் இந்த போஸ்டரில் இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.