தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் நிச்சயம் வெற்றி அடையும் என இசையமைப்பாளர் தமன் கூறியுள்ளார்.தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றின் ஜேசன் சஞ்சய் குறித்து பேசி உள்ளார்.
#Thaman about #JasonSanjay Film:
“I was shocked when JasonSanjay narrated that script to me🤯. He could have easily directed with a huge star, but he wanted to do with SundeepKishan as he would be perfect fit for role🌟. Movie gonna be a huge success🎯”pic.twitter.com/1M0MPI9EJ0
— AmuthaBharathi (@CinemaWithAB) January 8, 2025
அதன்படி அவர் பேசியதாவது, “ஜேசன் சஞ்சய் என்னிடம் கதை சொன்னதும் நான் ஷாக் ஆகிவிட்டேன். அவர் நினைத்திருந்தால் இந்த கதையில் பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தால் கூட கால் ஷீட் கிடைத்திருக்கும். ஆனால் அவர் சந்தீப் கிஷன் தான் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று சொன்னார். அதில் உறுதியாகவும் இருந்தார். நிச்சயம் ஜேசன் சஞ்சயின் படம் வெற்றி அடையும்” என்று தெரிவித்துள்ளார்.