Homeசெய்திகள்தமிழ்நாடுபெரியார் குறித்து அவதூறு : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது!

பெரியார் குறித்து அவதூறு : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற த.பெ.தி.க-வினர் கைது!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செயதனர்.

தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்!

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை மேற்கோள்காட்டி பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது. சீமானின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீமான் பெரியார் குறித்த பேச்சுக்கான ஆதாரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது சீமானை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். முற்றுகை போராட்டத்தையொட்டி அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது பேசிய கோவை ராமகிருஷ்ணன், பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் தவறானதை எனறும், அது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், பெரியார் குறித்த கருத்துக்கான ஆதாரத்தை நிச்சயமாக சீமான் வழங்க வேண்டும் என்றும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். பின்னர் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இந்த நிகழ்வின்போது நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் சசிக்குமார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ