Homeசெய்திகள்சினிமா'காதலிக்க நேரமில்லை' படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.... ஜெயம் ரவி பேச்சு!

‘காதலிக்க நேரமில்லை’ படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது…. ஜெயம் ரவி பேச்சு!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை திரைப்படம் தனக்கு மிகவும் ஸ்பெஷலானது என்று கூறியுள்ளார்.'காதலிக்க நேரமில்லை' படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.... ஜெயம் ரவி பேச்சு!

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்தியா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து லால், வினய் ராய், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கென், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க கிருத்திகா உதயநிதி படத்தை இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். காவெமிக் ஆரி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. 'காதலிக்க நேரமில்லை' படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.... ஜெயம் ரவி பேச்சு!ஒரு பக்கம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வர மற்றொரு பக்கம் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஜெயம் ரவி, “காதலிக்க நேரமில்லை படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். நான் மற்ற படங்களை எல்லாம் முக்கியமான படம் என்று சொல்லி இருப்பேன்.

ஆனால் இது எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் முதன்முறையாக ஒரு பெண் இயக்குனருடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் பணியாற்றியதன் மூலம் பெண்களின் பார்வையை நான் புரிந்து கொண்டேன். மேலும் இந்த படம் ஒரு அழகான காதல் கதை ” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ