spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsதனது ரேஸிங் அனுபவம் குறித்து நடிகர் அஜித் பேட்டி!

தனது ரேஸிங் அனுபவம் குறித்து நடிகர் அஜித் பேட்டி!

-

- Advertisement -
kadalkanni

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அஜித் பேட்டி அளித்துள்ளார்.கார் ரேஸிங் தனது ரேஸிங் அனுபவம் குறித்து நடிகர் அஜித் பேட்டி!நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் சிறுவயதிலிருந்தே கார் ரேஸிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இடையில் அஜித்துக்கு ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக ரேஸிங்கில் கலந்து கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அதன்படி தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தனது ரேஸிங் அனுபவம் குறித்து நடிகர் அஜித் பேட்டி!இதற்கிடையில் தனது பெயரில் ரேஸிங் அணியை தொடங்கிய அஜித், குட் பேட் அட்லி, விடாமுயற்சி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளையும் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துவிட்டு துபாயில் நடைபெறும் 24H ரேஸிங்கில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அதன்படி தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் அஜித்.

இந்நிலையில் ரேஸிங்கில் தன்னுடைய அனுபவம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், கடந்த முறை சினிமா காரணமாக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்த முடியாமல் போனதாகவும் அவர் விளையாட்டில் சாதிக்க விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இனி 9 மாதங்களுக்கு எந்த சினிமாவிலும் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் அஜித் இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ