spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் - இரா.முத்தரசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் – இரா.முத்தரசன்

-

- Advertisement -
kadalkanni

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்  என  இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் - இரா.முத்தரசன்இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆதரவுடன் இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.கழகம் வேட்பாளராக திரு.வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரின் வி.சி.சந்திரகுமார் மாபெரும்  வெற்றிக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பாடுபடும் என்பதை மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள்,  கூட்டணியில் திமுக போட்டியிடுவதால் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். காங்கிரஸ்  மாநில கமிட்டி, அகில இந்திய கமிட்டி ஒப்புதலுடன் திமுக போட்டியிடுவது, தற்போதைய காலத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் வரவேற்பதாக கூறினர்.

காங்கிரஸ் கட்சிக்கு சீட் கேட்பது எங்கள் உரிமை, அதே நேரத்தில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக வேட்பாளரை ஜெயிக்க வைப்பது  எங்கள் கடமை என தெரிவித்தனர். கடந்த தேர்தலை விட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை ஜெயிக்க வைப்போம் என்றும்  2026.ல் மீண்டும் இந்த தொகுதியை கேட்போம் என்றும் தெரிவித்தனர்.

இளங்கோவன் நின்ற போது திமுக தலைவர் ஸ்டாலினே நிற்பதை போல் கருதி பணியாற்றினர். எனவே இந்த இடைத்தேர்தலில் ராகுல்காந்தியே நிற்பதாக கருதி காங்கிரஸ் கட்சியினர் இந்த இடைத்தேர்தல் பணியாற்றுவோம், திமுக, காங்கிரஸ் என பிரித்து பார்க்காமல் குடும்பமாக பார்த்து கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை திமுகவினர் ஜெயிக்க வைத்ததாக நினைவு கூர்ந்து பாராட்டினர்.. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிடுவதால் எந்த மன வருத்தமும் இல்லை என கூறினர்..

 

7வது முறையாகவும் திராவிட மாடல் ஆட்சிதான்… சட்டப்பேரவையில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்..!

MUST READ