பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பொங்கல் பானை மற்றும் அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் அத்தோடு பொங்கல் அன்று அதிகாலை வீட்டின் முன்பு மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் சாலை ஓரத்தில் மண்பானை மற்றும் மண் அடுப்பு ஆகியவை விற்பனை படுதோராக நடந்து வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மண்பானை செய்யக்கூடிய மண்பாண்ட தொழிலாளர்கள் தாங்கள் செய்த சிறிய பானை மற்றும் பெரிய பானை என வண்ணம் தீட்டப்பட்ட பானைகளை அங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
தங்கள் கொண்டு வந்துள்ள வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் மற்றும் சிறியது முதல் பெரியது வரையிலான பானைகள் மண் அடுப்பு போன்றவைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.
பொங்கலையொட்டி ஆவினில் 50மி.லி.நெய்ஜார் அறிமுகம்- மதுரை ஆவின்