spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... பதுங்கும் எடப்பாடி... பாயும் பிரேமலதா... களமிறக்கப்படும் விஜய பிரபாகர்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பதுங்கும் எடப்பாடி… பாயும் பிரேமலதா… களமிறக்கப்படும் விஜய பிரபாகர்..!

-

- Advertisement -
kadalkanni

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் தே.மு.தி.க. சார்பில் விஜயபிரபாகரன் அல்லது தே.மு.தி.க. மா.செ. ஒருவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜன.,10) தொடங்கியது. 13 மற்றும் 17ம் தேதிகள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வந்த நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, வேட்பாளராக சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தரப்பில் இதுவரை தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2023ல் நடந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான த.மா.கா., போட்டியிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அ.தி.மு.க., கூட்டணியில் யார் போட்டியிடப் போகிறார் என்பது அத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஒருவேளை அ.தி.மு.க., போட்டியிடவில்லை எனில், தே.மு.தி.க., போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதைய தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், முன்னாள் தே.மு.தி.க., நிர்வாகி ஆவார். மறைந்த அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துக்கு நெருக்கமான தலைவராகவும் இருந்துள்ளார். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது, தி.மு.க.,வுக்கு கட்சி மாறிய எம்.எல்.ஏ.,க்களில் அவரும் ஒருவர். தற்போது தி.மு.க.,வில் போட்டியிடும் அவரை பழி தீர்க்க, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் போட்டியிடுவது பற்றி அ.தி.மு.க., தலைமை இன்று இறுதி முடிவு எடுக்க உள்ளது. அ.தி.மு.க., தலைமை முடிவு வெளியான உடன், தே.மு.தி.க.,வும் தங்கள் முடிவை அறிவிக்க உள்ளது.விஜய பிரபாகரன்

தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களம் இறங்கவும் வாய்ப்புள்ளதாக, கட்சியினர் கூறி வருகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ