பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும் விரைவில் சீமானின் வீட்டை முற்றுகையிட உள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டணி இயக்கங்கள் தெரிவித்துள்ளன! சீமானுக்கு தமிழ் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பேசுவது தமிழ் தேசியம் கிடையாது. தமிழ் தேசியத்தின் கோட்பாடுகள் குறித்து அவர் எங்கும் பேசியது கிடையாது! சீமானுக்கு ஆதரவாக பாஜக வருகிறது. அவர்களுக்குள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. பாஜகவுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்பதற்காக சீமான் இதைச் செய்து வருகிறார் என திருமுருகன் காந்தி கூறியுள்ளாா்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பெரியார் குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டணி இயக்கங்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொது மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளாா்.
அப்போது திருமுருகன் காந்தி பேசுகையில் – தந்தை பெரியார் குறித்து உண்மைக்கு மாறான அவதூறான செய்திகளை சீமான் தொடர்ச்சியாகப் பேசி வருவதை கண்டிக்கிறோம். தந்தை பெரியார் பேசிய கருத்துக்களை திரித்து அதை அவதூறாகப் பரப்புவதை பாஜகவும் ஆர் எஸ் எஸ் உம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்கள். அந்தச் செய்திகளை எடுத்து பெரியாருக்கு எதிரான குற்றச்சாட்டாக முன்வைக்கிறார் சீமான். அது குறித்து ஆதாரங்களைக் கேட்டால் அவற்றை அவை என்னுடன் என்னிடம் இல்லை என்றும் பெரியாரின் எழுத்துக்களை நாட்ருடைமை ஆக்கினால் அவை தெரியவரும் என்றும் கூறுகிறார்.
அவரிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் மூலங்களைப் படிக்காமல், எங்கேயோ படித்து அவதூறுகளைப் பரப்புகிறார் என்பது தெரிகிறது. பெரியாரின் புத்தகங்கள் பெரியார் சுயமரியாதை பதிப்பகம் மூலமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெரியாரின் எழுத்துக்கள் அனைத்தும் புத்தகங்களாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சீமானுக்கு நாட்டுடைமை ஆக்குவது என்பது என்னவென்று தெரியுமா என்று கேள்வி எழுப்பினார்.
பெரியாரின் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கினார் சீமான், அண்ணாமலை போன்றோர் பெரியாரின் எழுத்துக்களைத் திரித்துப் புத்தகமாக வெளியிடக்கூடும். சீமானிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் வாய்க்கு வந்ததையும் பாஜக பரப்பிய அவதூரிலிருந்தும் சீமான் எடுத்துப் பேசி உள்ளார். திருமண முறை ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு விதமாக இருப்பதாகவும், இதற்கென ஒரு பொதுமுறை இல்லை என்றும் பெரியார் சுட்டிக் காட்டுகிறார்.
சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துக்களைக் கொண்டுள்ள புராணங்களைப் நிராகரியுங்கள் என்றுதான் பெரியார் கூறியுள்ளார். சீமானும் அண்ணாமலையும் இதிகாசங்களைக் கேள்வி எழுப்ப வேண்டும். தயவு செய்து அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும். அது திரிக்கப்பட்டதாக இருந்தால் அதன் விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்ள நேரிடும். சுயமரியாதைக்காக போராடிய பெரியாரை அவதூறு செய்பவர்களை கைது செய்திருக்க வேண்டும்.
சீமானுக்கு தமிழ் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பேசுவது தமிழ் தேசியம் கிடையாது. தமிழ் தேசியத்தின் கோட்பாடுகள் குறித்து அவர் எங்கும் பேசியது கிடையாது. சீமானுக்கு ஆதரவாக பாஜக வருகிறது. அவர்களுக்குள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்திருக்கிறது. பாஜகவுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்பதற்காக சீமான் இதைச் செய்து வருகிறார். பெரியாரை விமர்சித்த சீமானுக்கு எதிராக இப்போதுவரை எதிர்கட்சித் தலைவர் பேசவில்லை, அதிமுக தரப்பில் இருந்து கண்டனம் வரவில்லை. அதைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் எந்த கட்சியும் பெரியாருடன் முரண்பட்டு இருக்கலாம். ஆனால் யாரும் அவதூறு சொன்னது கிடையாது.
சீமான் சங்கியாக மாறியதற்காக, பாஜகவுடன் நெருக்கம் காட்டியதற்காக, சீமானுக்கு பாட்டில் பாட்டிலாக கோமியம் அனுப்பப்படும். பெரியாரை இழிவுபடுத்தி பேசியதற்கு எதிராக 20ஆம் தேதிக்குப் பிறகு சீமானின் வீட்டை பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சேர்ந்து முற்றுகையிடுவோம். எந்த இடத்திலும் விடுதலை புலிகளோ பிரபராகனோ பெரியாரையோ திராவிட இயக்கத்தையோ இழிவுபடுத்தியது கிடையாது. ஈழப் போராட்டத்தையும் தமிழகத்தில் நடந்த சுயமரியாதை போராட்டத்தையும் இழிவுபடுத்தும் சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி ஜனநாயக அமைப்புகளில் இணைய வேண்டும். தயவு செய்து அந்தக் கட்சியில் பயணிக்க வேண்டும். திமுக அரசு சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றம் கேட்கும் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவிற்கும் சீமானுக்கும் என்ன உறவு. யு ஜி சி வெளியிட்ட திருத்தங்கள் தொடர்பான போராட்டங்களை திசை திருப்புவதற்காக சீமான் இவ்வாறு செயல்பட்டதாக தெரிகிறது என கூறியுள்ளாா்.
அதன் பின்னர் ஷெரீப் அவர்கள் பேசுகையில் – தொடர்ச்சியாக தமிழ்ச் சமூகம் மீதும், திராவிடம் என்னும் சொல் மீதும், பெரியார் மீதும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறுவருக்கத் தக்க உரையாடலை நிகழ்த்தி வருகிறார். பொதுச் சமூகம் கேட்கக் கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார். பெரியார் மீது அவதுறு பேசிவிட்டு, இசுலாமியர்கள் குறித்து பெரியார் அவதூறு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
சீமானைப் போல உருது பேசும் இஸ்லாமியர்கள் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளார் சீமான். இஸ்லாமியர்களுக்கும் பெரியாருக்கும் இருந்த தோழமை இந்த உலகத்திற்கே தெரியும். தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கும் சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளாா்.
சீமானை கண்டித்து அன்னூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்