நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் இருந்து விலகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சிறுவயதிலிருந்தே பிக், கார் ரேஸிங்கில் ஆர்வம் உடைய அஜித் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸிங்கில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் 24H பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக கடந்தாண்டே அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் அணி ஒன்றை தொடங்கி அதற்காக பயிற்சிகளையும் மேற்கொண்டார். துபாய் சென்ற பிறகும் தனது அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்ட வந்தார் அஜித். ஆனால் பயிற்சியின்போது நடிகர் அஜித்திற்கு விபத்து ஏற்பட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதிர்ஷ்டவசமாக அஜித் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பிய நிலையில் நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் வெற்றி பெற வேண்டும் என திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் இருந்து அஜித் விலகி உள்ளாராம். அதாவது அஜித், அணியின் உரிமையாளராக மட்டுமே செயல்படுவார் என்றும் அவர் ரேஸராக களமிறங்க மாட்டார் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே அஜித், ரேஸிங்கில் கலந்து கொண்ட போது பலமுறை அவர் விபத்தில் சிக்கி இருக்கிறார். எனவே தற்போது 53 வயதான அஜித்தின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அஜித் மீதான அளவுக்கு அதிகமான அன்பினால் ரசிகர்கள் இந்த தகவலை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.