Homeசெய்திகள்மாவட்டம்திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்

-

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்

திருச்சி அருகே நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்டம் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்

அதன்படி கடந்த 18 ஆம் தேதி பங்குனி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று காலையில் தேரோட்ட விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர்தலில் ஒன்றில் ஜம்புகேஸ்வரரும் மற்றொன்றில் அகிலாண்டேஸ்வரி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதை எடுத்து சிவனடியார்கள் முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இரண்டு தேர்களும் 4 ரத வீதிகளில் வளம் வந்து பின்னர் நிலையை அடைந்தன. தேரோட்டத்தை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

MUST READ