நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை தனது வீட்டில் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளாகி லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மறுபுறம் தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில், சம்பவத்திற்குப் பிறகு சைஃப் அலி கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அந்த பயங்கரமான காட்சியை விவரித்துள்ளார். அன்று இரவு என்ன நடந்தது என்பதை ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார்.
”நாங்கள் வந்து கொண்டிருந்தபோது ஒரு குரல் கேட்டது. தூரத்திலிருந்து ஒரு ஒரு பெண் வந்து கொண்டிருந்தார். ஆட்டோ… ஆட்டோ பதற்றத்தோடு கூப்பிட்டார். அதனால் நானும் பயந்துவிட்டேன். பிறகு வாசலில் இருந்தும் ஒரு சத்தம் வந்தது. அதனால் நான் ஒரு யு-டர்ன் எடுத்து கேட் நோக்கிச் சென்று ஆடோவை அங்கே நிறுத்தினேன்.அந்த நேரத்தில் அது சைஃப் அலி கான் என்பதை நான் பார்க்கவில்லை. அவர் பேன்ட் மற்றும் குர்தா அணிந்திருந்தார். எல்லாம் இரத்தத்தில் நனைந்திருந்தது. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். அதன் பிறகு, நாங்கள் மருத்துவமனையை அடைந்ததும், அவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றோம். அங்கே ஒரு ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் பின்னோக்கி நகர்ந்தது. பின்னர் ஆட்டோ ஓரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தான் அவர் சைஃப் அலிகான் என்பதையும், அவர்தான் அந்த நிலையில் இருப்பதையும் நான் கண்டேன்.நான் பணத்தைக் கூட வாங்கவில்லை”என்று ஆட்டோ டிரைவர் கூறினார்.
லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலி கான் தற்போது ஆபத்திலிருந்து மீண்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர் ஒரு மில்லி மீட்டர் ஆழத்தில் காயம் ஏற்படுத்தியிருந்தால், சைஃப் அலி கானின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. சைஃப் அலி கானுக்கு மருத்துவர்கள் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சைஃப்பை ஆறு மணி நேரம் ஆபரேஷன் தியேட்டரில் வைத்திருக்க வேண்டியிருந்தது.