Homeசெய்திகள்சினிமாசைஃப் அலிகானை தாக்கியவர் எதையும் திருடவில்லை.... கரீனா கபூர் வாக்குமூலம்!

சைஃப் அலிகானை தாக்கியவர் எதையும் திருடவில்லை…. கரீனா கபூர் வாக்குமூலம்!

-

- Advertisement -

மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சைஃப் அலிகானை தாக்கியவர் எதையும் திருடவில்லை.... கரீனா கபூர் வாக்குமூலம்!இந்த சம்பவத்தில் அந்த மர்ம நபர் சைஃப் அலிகானை 6 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். மேலும் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழக்கில் சைஃப் அலிகானை தாக்கிய மர்ம நபரை பிடிக்க போலீசார் கிட்டத்தட்ட 30 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை தேடும் வேட்டையில் களமிறங்கியுள்ளனர். அடுத்தது இந்த வழக்கில் சைஃப் அலிகானின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் அந்த மர்ம நபரின் முதல் இலக்கு சைஃப் அலிகானின் 4 வயது மகன் தான். அந்த சிறுவனை வைத்து ஒரு கோடி ரூபாய் மிரட்டி தன்னை தாக்கிய போது சைஃப் அலிகான் அந்த நபரை தடுக்க முயன்றார். அப்போதுதான் சைஃப் அலிகான் அந்த நபரால் தாக்கப்பட்டார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். சைஃப் அலிகானை தாக்கியவர் எதையும் திருடவில்லை.... கரீனா கபூர் வாக்குமூலம்!அவரைத் தொடர்ந்து சைஃப் அலிகானின் மனைவியும் பிரபல நடிகையுமான கரீனா கபூர், “தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் ஆக்ரோஷமாக சைஃப் அலிகானை மீண்டும் மீண்டும் தாக்கினார். எனது கணவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதே முக்கியமான நோக்கமாக இருந்தது. எனவே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் அந்நபர் வீட்டில் இருந்து எந்த பொருளையும் திருடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ