Homeசெய்திகள்க்ரைம்இந்தியா-இங்கி. டி20 போட்டிக்கு போலி இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை... சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

இந்தியா-இங்கி. டி20 போட்டிக்கு போலி இணையதளம் மூலம் டிக்கெட் விற்பனை… சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

-

- Advertisement -

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டிக்கு போலி இணையதளம் உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்த மோசடி கும்பல் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளன. டி-20 தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில்  வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்காக, புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில், bookcricketicket.co.in என்ற லிங்க் மூலம் டிக்கெட் புக் செய்துள்ளார். இணையதள முகவரியில் 3 பேருக்கு டிக்கெட் எடுக்க, அதற்கான தொகையாக ரூ.6,360 செலுத்தினார். ஆனால், புக்கிங் ஆன டிக்கெட் ஏதும் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன பேரில் புதுச்சேரி  சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி கும்பல் கிரிக்கெட் போட்டிக்காக போலியாக டிக்கெட் புக்கிங் இணையதள பக்கத்தை உருவாக்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளத்தில் வரும் அங்கீகாரம் இல்லாத இணையதளம் வழியாக டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டாம் எனவும், டிக்கெட் புக் செய்யும் போலி இணையதளத்தை முடக்கம் செய்ய கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ