ஆங்கிலேயர்கள் காலனித்துவத்தின் ஆட்சியில் இந்தியா இருந்த போது 1765 முதல் 1900ம் ஆண்டுவரை இந்தியாவிலிருந்து ரூ.5600 லட்சம் கோடி சொத்துக்களை பிரிட்டன் கொள்ளையடித்துள்ளது என்று ஆக்ஸ் ஃபாம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 64,81,999 கோடி அமெரிக்க டாலர்கள் என்றும், பிரிட்டனில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் மட்டும் 33,79,999 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளனர் என்றும் ஆக்ஸ் ஃபாம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு தொடங்கியதும், ஆக்ஸ் ஃபாம் அமைப்பு “ டேக்கர்ஸ் நாட் மேக்கர்ஸ்” என்ற தலைப்பில் ஓர் ஓறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் “காலனித்துவத்துவத்தின் உருவாக்கம்தான் இன்றைய நவீன பன்னாட்டு கார்ப்பரேஷன் என்று பல்வேறு ஆய்வுகளும், ஆய்வுக்கட்டுரைகளும் தெரிவிக்கின்றன. வரலாற்று காலனித்துவத்தின் கீழ் இருந்த அடிமைத்தனம்தான் நவீனமாக்கப்பட்டு பன்னாட்டு கார்ப்பரேஷனாக வந்துள்ளன.
இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன் சமத்துவமற்ற உலகை ஆழமாக உருவாக்குகிறது. இந்த உலகமும் இனரீதியாக பிளவுபட்டுள்ளது. உலகில் வடபகுதி சேதத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் பலன்பெற, உலகின் தென்பகுதி தேசத்திலிருந்து தொடர்ந்து வளங்கள் அமைப்புரீதியாக சுரண்டப்பட்டு வழங்கப்படுகின்றன. பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் கூற்றுப்படி 1765 முதல் 1900ம் வரையிலான ஆண்டுகளில் இந்தியாவின் வளங்களில் ரூ.5600 லட்சம் கோடி சொத்துக்களை பிரிட்டனின் 10 சதவீத கோடீஸ்வரர்கள் சுரண்டியுள்ளனர். இது இன்றைய டாலர்மதிப்பில் 33,79,999 கோடி அமெரிக்க டாலர்களாகும்.
லண்டன் முழுவதும் 50 பவுண்ட் நோட்டுகள் மூலம் பரப்பி கம்பளம் பரப்ப 4 மடங்கு அதிகமாக இருக்கும். பிரிட்டனில் உள்ள கோடீஸ்வரர்களில் குறிப்பிட்ட அளவு பிரிவினர் குடும்ப சொத்துக்கள் அடிமைத்தனம், காலனித்துவம் ஆட்சியில்இருந்தபோது சேர்க்கப்பட்டவை. உலகில் அடிமைத்தனம் அகற்றப்பட்டபோது, கோடீஸ்வரர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டவையாகும்.
இந்தியாவில் ஆட்சி செய்த கிழக்கு இந்தியா கம்பெனிதான், சட்டத்தைக் கொண்டு, பல காலனித்துவ குற்றங்களை செய்வதற்கு மூலாதாரமாக இருந்தது. இன்றைய நவீன உலகில், பன்னாட்டு கார்ப்பரேஷன்கள், முற்றுமையாக இருந்து, உலகின் தென்பகுதி தேசத்திலிருந்து மக்களை சுரண்டுகிறது. குறிப்பாக பெண் தொழிலாளர்களை உலகின் வடபகுதி தேசத்து கோடீஸ்வரர்கள் சுரண்டுகிறார்கள்.
1765 முதல் 1900 வரை இந்தியாவில் காலனி ஆட்சியில் இருந்த 100 ஆண்டுகளில், பிரட்டன் ஏராளமான கோடி சொத்துக்களை கொண்டு சென்றது. பிரிட்டினில் புதிதாக உதியமாகியுள்ள இன்றைய நடுத்தரக் குடும்பத்தினர் காலனித்துவத்தால் பயனடைந்து சொத்துக்களை சேர்த்தவர்கள்.பரிட்டினில் உள்ள 10 சதவீத கோடீஸ்வரர்கள் 52 சதவீத இந்திய சொத்துக்களை வைத்திருக்கும் நிலையில், 32 சதவீத வருமானத்தை புதிய நடுத்தர பிரிவினர் பெற்றுள்ளனர்.
1750களில் உலக தொழில்துறை உற்பத்தியில் இந்தியாதான் 25 சதவீதம் பங்களிப்பு செய்திருந்தது. ஆனால், இது காலனித்துவத்தின் ஆட்சியில் 1900ம் ஆண்டுக்குள் உற்பத்தி சதவீதம் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.காலனித்துவத்தில் முக்கியமாக இருப்பது போதை மருந்துகளை பழக்கப்படுத்துதல், விற்பனை செய்தலாகும். பிரிட்டிஷார் போதைப் பொருட்கள் குறிப்பாக ஓப்பியம் போதைப் பொருட்களுக்கு மூலமாக பாப்பி விளைச்சலை ஏழை விவசாயிகள் மூலம் பெருக்கியுள்ளனர். இந்த ஓப்பியத்தையும், பாப்பியையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது