புஷ்பா 2 பட தயாரிப்பாளர் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அதேசமயம் இந்நிறுவனம் தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை இன்று ஜனவரி 21 காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த சோதனையில் வரி ஏய்ப்பு ஏதேனும் உறுதி செய்யப்பட்டால் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு சொந்தமான 8க்கும் மேலான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.