Homeசெய்திகள்அரசியல்பிரபாகரனுடன் எடிட் புகைப்படம்… சங்ககிரி ராஜ்குமார் 15 வருஷமா எங்கே படுத்திருந்தான்..?: சீமான் கேட்ட ஒற்றை...

பிரபாகரனுடன் எடிட் புகைப்படம்… சங்ககிரி ராஜ்குமார் 15 வருஷமா எங்கே படுத்திருந்தான்..?: சீமான் கேட்ட ஒற்றை கேள்வி…!

-

- Advertisement -

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்து வருவதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்திலும் பெரியார் பற்றிய விமர்சனத்தை ஆழமாக முன் வைத்துப் பேசினார் சீமான். தனது பனையூர் வீட்டருகில் செய்தியாளர்களை சந்தித்த அவர், , ”என்னுடைய கருத்தில் தவறில்லை. பெரியாரின் கருத்தில்தான் தவறியிருக்கிறது. நான் புதிதாக ஒரு கருத்தை சொல்லவில்லை. அவர் சொன்னதை, அவர் பேசியதை எடுத்துச் சொல்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது? பெரியார் கூறிய கருத்துக்களை நாங்கள் எடுத்துச் சொல்கிறோம். அதில், அந்த கருத்தில், தவறு இருந்தால் அதற்கு பெரியார் தான் பொறுப்பேற்க வேண்டும். நான் பேசுவதில் இந்த கருத்து தப்பு, இந்த கருத்து தப்பு என்று இதனை சொல்ல வேண்டும். தப்பு, தப்பு.. .தவறு, தவறு என்று சொன்னால் இது தவறு என்று சொல்லுங்கள்.

இது தொடர்பான ஆதாரங்கள் உங்களுக்கு எதற்கு? நீங்கள் தான் வழக்கு தொடுத்தீர்களே.. அங்கே கேட்பாங்கல்ல. அப்ப காட்டுவேன்ல… அப்போ எதை வைச்சு பேசினோம் என்ன என்பதை சொல்வோம். திருமுருகன் காந்திக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? என் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். அவர்களை கூப்பிட்டு பேசச் சொல்லுங்கள். சங்ககிரி ராஜ்குமார் வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை நான் ஆதரித்து பேசும் போது அவர் பேசுகிறார். வன்னிய மக்கள் கூட இருங்கண்ணே விட்டுறாதீங்க… என சொன்னார். சரி தம்பி, சரி தம்பி. என்றேன். அவர் வெங்காயம் என்று ஒரு படம் எடுத்தார். அதனால் இப்போது வெங்காயங்களுக்காக பேசுகிறார். நீங்கள் என்ன பெரிய எடிட்டரா..? வி.டி.விஜயனா? ஸ்ரீதர் பிரசாத்தா..? 15 வருஷமா எங்கே படுத்திருந்தான்? என்னடா காமெடி பண்றீங்க. அந்த படம் முதன் முதலில் ஆனந்த விகடன் அட்டையில் வந்ததுல்ல… அப்பவே சொல்லி இருக்க வேண்டியதுதானே..

உங்க பெரியார் மேல அடி விழுந்த உடனே பிரபாகரன் பொய்யின்றீங்களா..? மோதிவிடனும் முடிவாகிடுச்சு. பிரபாகரனா? பெரியாரா? அப்ப மோதி விட வேண்டியது தானே. ஊருக்குள்ள குறுக்க மறுக்க எல்லோரும், என் மாமமன், மச்சான், அண்ணன், தம்பி, சித்தப்பன், பெரியப்பனா இருக்கறதுனால கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு. மெயின் பிராஞ்ச் பேசாம இருக்குதுல்ல. ஹோல்சேல் டீலர் பேசாம இருக்கார்ல நீங்க ஏன் பெட்டிக்கடைக்காரங்க இவ்வளவு துள்ளி வர்றீங்க. பிராஞ்ச் ஏன் இவ்வளவு பேசுறீங்க. மெய்ன் ஆபீஸ வர சொல்லுங்க. எங்கய்யா வீரமணியை பேச சொல்லுங்க. நியாயமான கருத்து சொல்ல யாருக்கும் தெம்பில்லை.
அதனால் என் மீது அவதூறு கருத்துக்களைத் தவிர வேறு ஏதும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

இந்த குளத்தூர் மணி என்பவரரை நான் மதிக்கிறேன். ஒரு பெரியவர், பெரிய மனிதன் அண்ணன் என்பது தர வேறு எதுவும் சொல்வதில்லை. சோவையும், குரு மூர்த்தியையும் காலில் விழுந்து ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம் போய் நாம் தமிழர் என்ற கட்சி பெயரை வாங்கிட்டு வந்ததாக சொல்கிறார். இதுதான் திராவிட புரட்டு புழுகு. நாம் தமிழர் கட்சி என் தாத்தா உடையது,. தமிழ் தந்தையினுடையது. ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உடையது. அந்தப் பெயரை நாம் தமிழர் என்று பெயர் வைப்பதற்கு யாரிடம் போய் அனுமதி வாங்க வேண்டும். ஐயா சோவுக்கும், குருமூர்த்திக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கிறதா? எதையாவது அடிப்படை அறிவோடு பேசுகிறீர்களா?

எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுக் கதையை விடுவீர்கள்? நான் எதிர்த்து உங்களைப் பேச மாட்டேன் என்கிற ஒரே திமிரா? உங்க கூட இருந்து அண்ணனா? தம்பியா? மதித்து வாழ்வதனால் தானே இத்தனை நாள் நான் அமைதியாக இருந்தேன். உண்மையிலேயே சோவும், குருமூர்த்தியும் இந்த கட்சியின் பெயரை எனக்கு வாங்கிக் கொடுத்தார்களா? அதற்கு உங்களிடம் ஏதாவது சான்று இருக்கா? எங்க அம்மாவை என்றைக்காவது பார்த்திருக்கிறீர்களா? எங்க அம்மா வந்து உங்களிடம் புகார் அளித்தாரா? மனசாட்சியோடு பேசுங்கள். நாங்கள் மதிக்கின்ற எங்கள் முன்னோடிகளாக அண்ணன்களாக பேசுங்கள். பெரியார் உங்களுக்கு தேவை என்றால் பூஜை அறையில் வைத்து பூஜை பண்ணுங்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

எங்களுக்கு தேவையில்லை எடுத்துட்டு போங்க அவ்வளவுதானே.. முதலில் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர். தமிழர், தமிழரசு என்று பேசுவது பித்தலாட்டம். திராவிட எழுச்சி அதை தடுப்பதற்கு செய்யக்கூடிய அயோக்கியத்தனம். இது ஆரியர்களுக்கு செய்கிற கைக்கூலித்தனம் என்றெல்லாம் பெரியார் பேசியிருக்கிறார். தமிழ் முட்டாள்களின் பாஷை. தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழ் சனியனை விட்டு ஒழிக்க வேண்டும். தமிழ் உங்களை படிக்க வைத்ததா? என்றெல்லாம் கேட்டவர் பெரியார். இப்படிப் பேசும் நீங்கள் என் நிலத்தில் நீங்கள் யார்? அவர் கன்னடர் என அவரே சொல்கிறார். நான் ஒரு பலிஜா நாயுடு என்று…

உங்கள் தாய்மொழி எது அது உங்களுக்கே தெரியும்.நீங்கள் என்னிடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு தமிழ் முட்டாள்களின் பாஷை அப்படின்னா தெலுங்கு பேசியவர்கள் இருக்கிறார்கள், கன்னட பேசுகிறார்கள், உருது பேசுவார்கள், மலையாளம் பேசுவார்கள் இருக்கிறார்கள், இந்தி பேசுகிறீர்கள், போஜ்பூரி ,குஜராத்தி, மராட்டி எல்லாரும் இருக்கிறார்கள். எல்லாரும் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள், இந்த மொழிகள் எல்லாம் உயர்ந்தது என்று சொல்லிவிட்டு என் மொழியை சனியன் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? எம் தாய் மொழி தமிழை மொழியை தாழ்த்தி பேசுவதற்கு நீங்கள் யார்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

MUST READ